
அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளராக அடையாளம் காட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ஆனந்த ராஜ் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார். அவர் ஆரம்பம் முதலே அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் நிலை வேதனை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த அனந்தராஜ் கூறியதாவது. ஜெயலலிதா இடத்தில் வேறு ஒரு தலைமையை திணிப்பதை விரும்பவில்லை. அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் எல்லாம் அதிமுக தலைமையை அடையாளம் காட்டுகிறார்கள். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் , தொண்டர்களால் மக்களால் ஏற்றுகொள்ளப்படும் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும்.
பல மூத்த தலைவர்களை தலைமை தான் அடையாளம் காட்டியது தற்போதய நிலமை மூத்த தலைவர்கள் தான் தலைமையை அடையாளம் காட்டுகின்றனர்.
சசிகலா பொறுப்பேற்க இது சரியான நேரமில்லை , சூழ்நிலை மோசமாக உள்ளது வருமான வரித்துறை சோதனை உடபட கடுமையான சூழ்நிலை உள்ளது, பொன்னையன் மூத்தவர் இவர்களை அடையாளம் காட்டியது அம்மா தான் இவர்கள் தலைமையை அடையாளம் காட்டுகிறார்கள் அதுதான் வேதனை. மக்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும்
தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும் வற்புறுத்தி கொண்டு வந்தால் எதிர்ப்புத்தான் வரும். நான் எதிர்கவில்லை , நேர் வழியில் போனால் அடிபடும் சுற்றி போனாஅல் பாதுகாப்பு என்று சொல்கிறேன். மக்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். பொதுக்குழுவில் யார் வந்தாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதாக தெரிவித்த அவர் தனக்கு பொதுக்குழு அழைப்பிதழ் வரவில்லை என்று தெரிவித்தார்.
முதல்வரை மாற்றச்சொல்லி உதயகுமார் போன்ற அரசியல் வாதிகள் சுய லாபத்திற்காக ஒரு அமைச்சராக இருந்துகொண்டு முதலமைச்சரை மாற்ற சொல்வது சட்டப்படி தவறு.
தான் தற்போது முழுமையாக அதிமுகவிலிருந்து விலகி விட்டதாக தெரிவித்த அவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்ட போது , அரசியலில் இருக்க வேண்டுமா, நடிகனாக இருக்க வேண்டுமா, எனக்கு ஆறுதலாக சொன்ன ரசிகர்கள் , பொதுமக்கள் கையில் விடுகிறேன் அவர்களே சொல்லட்டும் , என்று தெரிவித்தார்.