ஜெ நினைவிடத்தில் மையம் கொள்ளும் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ்.. உளவுத்துறை High Alert. பாதுகாப்புக்கு 3000 போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2021, 4:12 PM IST
Highlights

எனவே அதற்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா மற்றும் வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடங்களில் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ள நிலையில் அங்கு சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. 

அதே நேரத்தில் அவரின்  தோழியும் அதிமுகவை கைப்பற்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு வரும் சசிகலாவும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் நாளை மரியாதை செலுத்த உள்ளார். அதற்காக ஏற்கனவே அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். அதாவது, 16 மற்றும் 17 ஆகிய இரு தினங்களும் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களில் அதிமுக தொண்டர்கள் கூட உள்ளனர். அதேபோல 17-ஆம் தேதி அதிமுக பொன் விழா ஆண்டு நடைபெறுவதையொட்டி அன்று காலை 10:30 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

எனவே அதற்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா மற்றும் வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆக 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மரியாதை செலுத்த சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் ஒரே இடத்தில் கூட இருப்பதாலும் அங்கு அதிக அளவில் தொண்டர்கள் கூட வாய்ப்பு உள்ளதாக போலீஸுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.  இருதரப்பு ஆதரவாளர்களும் கூட உள்ளதால், எவ்வித அசம்பாவிதமும் அங்கு நிகழாமல் தடுக்க சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 
 

click me!