ஜெ. பாணியில் எம்ஜிஆர் பாட்டை உதாரணம் சொன்ன சசிகலா

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
ஜெ. பாணியில் எம்ஜிஆர் பாட்டை உதாரணம் சொன்ன சசிகலா

சுருக்கம்

பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின்னர்  தொண்டர்களிடையே பேசி முடித்த சசிகலா தனது பேச்சை முடிக்கும் போது  ஜெயலலிதா பாணியில் எம்ஜிஆர் பாட்டை உதாரணமாக சொல்லி முடித்தார். 


ஜெயலலிதா  தனது பேச்சில் எப்போதும் வீராவேசமாக பேசுவார் , குட்டி கதைகள் சொல்லுவார். எம்ஜிஆர் பாட்டை உதாரணமாக கூறுவார். அடிக்கடி எங்கள் வீட்டு பிள்ளைன்படத்தில் வரும்நான் ஆணையிட்டால்பாடலில் வரும்  ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவர் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று கூறுவார். 


அதே போல் சசிகலா இன்று பேச்சை முடிக்கும்போது தனது பேச்சில் இந்த இயக்கம்  அனைவரின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்மா எந்த வேகத்தோடு ராணுவ கட்டுப்பாடோடு வைத்திருந்தார்களோ அதே அளவோடு கடுகளவும்குறையாமல் இம்மியும் பிசகாமல் பீடு நடை போடும். 


புரட்சித்தலைவர் சொன்னது போல் "" தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் , ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்  நாளை நமதே "" என்ற பாடல் வரிகளை எந்நாளும் ஏற்போம் என்று கூறினார். அதை கேட்டு தொண்டர்கள் கரகோசம் செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு