அந்தம்மாவை போல விட்டுக்கொடுத்து விலகிப்போங்கம்மா... சசிகலாவுக்கு ஜெயகுமார் வேண்டுகோள்..!

Published : Jul 20, 2021, 06:09 PM IST
அந்தம்மாவை போல விட்டுக்கொடுத்து விலகிப்போங்கம்மா... சசிகலாவுக்கு ஜெயகுமார் வேண்டுகோள்..!

சுருக்கம்

அதிமுகவை கைப்பற்றியே ஆக வேண்டும் என துரிதகதியில் புறப்பட்டு இருக்கிறார் சசிகலா. ஆடியோ வெளியீடு, டி.வி.பேட்டி என அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் சசிகலா இப்போது பொதுவெளிக்கும் வந்துவிட்டார்.  

எம்.ஜி.ஆர் இறந்தவுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததைப்போல சசிகலாவும் விட்டுத்தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதிமுகவை கைப்பற்றியே ஆக வேண்டும் என துரிதகதியில் புறப்பட்டு இருக்கிறார் சசிகலா. ஆடியோ வெளியீடு, டி.வி.பேட்டி என அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் சசிகலா இப்போது பொதுவெளிக்கும் வந்துவிட்டார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுசூதனின் உடல்நிலை கேட்டறிந்தார். அதேவேளை சசிகலாவும் மதுசூதனன் உடல்நிலை விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடி கட்டி சசிகலா மருத்துவமனைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் அதிமுக நிர்வாகிகள் அப்செட் ஆகி உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ‘’அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா அதிமுக தனது குடும்பம் என்பது நகைப்புக்குரியது. அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது. அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை.  சசிகலா தடையாக இல்லாமல் பெருந்தன்மையோடு கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும். ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல சசிகலா விட்டுத்தர வேண்டும்’’எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!