அதிமுகவிற்கு ஒரே தலைமை சசிகலா மட்டும் தான்...! சபதம் போடும் ஆறுகுட்டி...!

By manimegalai aFirst Published Mar 3, 2022, 11:47 AM IST
Highlights

சசிகலாவிற்கு அதிமுக தலைமை பொறுப்பு வழங்க வேண்டும் என முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக கட்சி தலைமை மீது அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இதே போல எடப்பாடி பழனிசாமி அங்கம் வகிக்கும் கொங்கு மண்டலமும் இந்த முறை கை கொடுக்கவில்லை எனவே இரட்டை  தலைமையால் தான் தோல்வி ஏற்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் கூற தொடங்கியுள்ளனர். எனவே கட்சிக்கு சசிகலா தலைமை தாங்க வேண்டும் என கடந்த சில தினங்களாக அதிமுகவினர் திரை மறைவில் கூறி வந்த நிலையில்  சசிகலாவிற்கு ஆதரவாக   தேனி மாவட்ட அதிமுகவினர்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 


இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருப்பதால் தலைமை  சரியில்லையென கூறியவர்,. அதிமுகவை காப்பாற்ற ஒற்றை தலைமை தான் வேண்டும் என தெரிவித்தார். தற்போதுள்ள இரட்டை தலைமை தோல்வியைதான் சந்தித்துள்ளது என தெரிவித்தார்..எனவே அதிமுகவை சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மேலும் தேனி மாவட்ட சேர்ந்தவர்களின் தீர்மானத்தால் கட்சி பிளவு படாது எனவும் தெரிவித்தார்.

தற்போது தேனி மாவட்டத்தில் தொடங்கிய சசிகலா ஆதரவு  குரல் கோவையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் அருண் மொழி தேவன் சசிகலாவை 90 சதவிகித மாவட்ட அமைப்புகள் சேர்ப்பதற்கு எதிரப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். ஒரு சில மாவட்டங்களின் குரல் பெரும்பான்மை ஆகாது என தெரிவித்துள்ளார். எனவே சசிகலா அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக  மற்ற மாவட்டங்கள் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்தே சசிகலா ரீ என்ட்ரி இருக்குமா? அல்லது அடங்கிவிடுமா என்பது தெரியவரும். அதே நேரத்தில் இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தடு்க்கும் வகையில் அதிமுக தலைமை விரைவில் அறிக்கை வாயிலாக கட்டுப்பாடு விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!