நடுத்தெருவில் நிற்க போகிறோம்! கர்ஜித்த சசிகலா! கைகளைப் பிசைந்த தினகரன்!

By Selva KathirFirst Published Mar 15, 2019, 12:24 PM IST
Highlights

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகலாவை நேற்று பெங்களூரில் சந்தித்து தினகரன் பேசியுள்ளார். நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு தினகரனை சந்திக்க சசிகலா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த சில மாதங்களாகவே தினகரன் தன்னிச்சையாக செயல் படுவதை சசிகலா விரும்பவில்லை. இதனால்தான் தினகரனை சந்திக்க சசிகலா தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தார். பெங்களூர் புகழேந்தி தலையிட்டு சசிகலாவை சமாதானப்படுத்தி தினகரனை சந்திக்க ஏற்பாடுகளை செய்தார்.
 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகலாவை நேற்று பெங்களூரில் சந்தித்து தினகரன் பேசியுள்ளார். நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு தினகரனை சந்திக்க சசிகலா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த சில மாதங்களாகவே தினகரன் தன்னிச்சையாக செயல் படுவதை சசிகலா விரும்பவில்லை. இதனால்தான் தினகரனை சந்திக்க சசிகலா தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தார். பெங்களூர் புகழேந்தி தலையிட்டு சசிகலாவை சமாதானப்படுத்தி தினகரனை சந்திக்க ஏற்பாடுகளை செய்தார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூர் சிறையில் சசிகலா தினகரன் சந்திப்பு நேற்று நிகழ்ந்தது. வழக்கத்திற்கு மாறாக இந்த சந்திப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மிகக் குறைந்த நேரம் மட்டுமே சசிகலா தினகரனுடன் பேசியுள்ளார். அப்போது 18 தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் 40 தொகுதிகளுக்கான அமமேக வேட்பாளர் பட்டியலை சசிகலாவிடம் தினகரன் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். வேட்பாளர் பட்டியலை சசிகலா ஏறெடுத்து கூட பார்க்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

காரணம் இரட்டை இலை சின்னம் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை தினகரன் எதிர்கொள்வதை சசிகலா சற்றும் விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைத்துள்ள பலமான கூட்டணியும் சசிகலாவை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கூட்டணி விவகாரத்தில் தினகரன் சரியான முயற்சிகளும் சரியான முடிவுகள் எடுக்க வில்லை என்றே சசிகலா நினைக்கிறார். இடைத்தேர்தலை போல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பது என்பது எளிமையானது அல்ல என்று சசிகலாவிற்கு நன்கு தெரியும். தற்போதைய சூழலில் கூட்டணி இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு சென்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என்றும் சசிகலாவிற்கு தெரியும். அப்படியிருந்தும் தினகரன் தனியாக 40 தொகுதிகளில் களமிறங்கப் போவதாக கூறி இருப்பது சசிகலாவை மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைய வைத்துள்ளது.

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையிலும் கணிசமான வாக்குகளையும் தினகரன் வேட்பாளர்கள் பெறாத பட்சத்தில் தினகரனின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாமல் சசிகலாவின் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அதிமுக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் சசிகலா குடும்பத்திற்கு இனி அந்த கட்சியில் எந்த இடமும் இருக்காது என்றும் சசிகலாவிற்கு நன்கு தெரியும். இதனால் தினகரன் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்கிற முடிவையும் இதற்காக ஆகும் செலவையும் எப்படி எதிர்கொள்வது என்று சசிகலா டென்ஷனில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதனால்தான் வேட்பாளர் பட்டியலை கொடுத்த தினகரனிடம் உன் முடிவு நம்மை நடுத்தெருவில் நிற்க வைக்கப் போகிறது என்ற சசிகலா கோபமாக கூறியதாகவும் அதற்கு தினகரன் கைகளைப் பிசைந்தபடி மட்டுமே நின்றதாகவும் சொல்கிறார்கள். இதன் எதிரொலியாகத்தான் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது தினகரன் வழக்கமான உற்சாகம் இல்லாமல் செய்தியாளர்களின் கேள்விக்கு சமாளித்தபடி பதிலளித்து கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்கள். 
 

click me!