சசிகலா காலாவதியான மருந்து... அது நோயைக் குணப்படுத்தாது... தெறிக்கவிட்ட வைகைச்செல்வன்..!

Published : Feb 09, 2021, 09:41 PM IST
சசிகலா காலாவதியான மருந்து... அது நோயைக் குணப்படுத்தாது... தெறிக்கவிட்ட வைகைச்செல்வன்..!

சுருக்கம்

சசிகலா காலாவதியான மாத்திரை. காலாவதியான மாத்திரை நோயைக் குணப்படுத்த உதவாது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.  

சிவகங்கையில்  அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “உலகிலேயே மின் கம்பியில் துணியைக் காய வைக்கச் செய்த ஆட்சி திமுக ஆட்சிதான். திமுகவின் ஐந்தாண்டு சாதனையே மின்வெட்டால் ஏற்பட்ட மக்கள்தொகை பெருக்கம்தான். பெங்களூருவிலிருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார்; அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்கிறார் மு.க. ஸ்டாலின். அப்படியெனில் நீங்கள் எதற்கு? கட்சியைக் கலைத்து விடுங்கள்.


எங்கிருந்தோ வருபவர் அதிமுகவைக் கைப்பற்றி விடுவாரா? சசிகலா காலாவதியான மாத்திரை. காலாவதியான மாத்திரை நோயைக் குணப்படுத்த உதவாது. அதை எடுத்துகொண்டால் பக்க விளைவுகள்தான் ஏற்படும். சசிகலாவைப் பொதுச்செயலாளராக அறிவிக்கும் தீர்மானத்தை எழுதி அதை முதன்முதலில் வாசித்தவன் நான்தான். ஆனால், மக்கள் எதிர்ப்பதால் ஏற்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்கள்” என்று வைகைச் செல்வன் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?