பரப்பன சிறையில் படுபயங்கர கோபத்தில் சசிகலா: அந்த துரோகிங்க என் மூஞ்சியிலேயே முழிக்க கூடாது என்னைக்கும்!

Published : Feb 06, 2020, 10:56 AM IST
பரப்பன சிறையில் படுபயங்கர கோபத்தில் சசிகலா: அந்த துரோகிங்க என் மூஞ்சியிலேயே முழிக்க கூடாது என்னைக்கும்!

சுருக்கம்

மிக சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற பழனிமாணிக்கம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினை மிக உச்சமாக புகழ்ந்து தள்ளி, ‘அடுத்த முதல்வர்!’ என்று பட்டமும் சூட்டிவிட்டார் சசிகலாவின் தம்பியும், அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன். இது சசியின் ஆசீர்வாதம் பெற்ற தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மட்டுமல்ல, இவர்களின் தாய்க் கட்சியான அ.தி.மு.க.வையும் மிக கடுமையாக அதிர வைத்துள்ளது. திவாகரனின் இந்த பேச்சை, அவரது மகன் ஜெயானந்தும் நியாயப்படுத்தி இருக்கிறார். 

மிக சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற பழனிமாணிக்கம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினை மிக உச்சமாக புகழ்ந்து தள்ளி, ‘அடுத்த முதல்வர்!’ என்று பட்டமும் சூட்டிவிட்டார் சசிகலாவின் தம்பியும், அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன். இது சசியின் ஆசீர்வாதம் பெற்ற தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மட்டுமல்ல, இவர்களின் தாய்க் கட்சியான அ.தி.மு.க.வையும் மிக கடுமையாக அதிர வைத்துள்ளது.  திவாகரனின் இந்த பேச்சை, அவரது மகன் ஜெயானந்தும் நியாயப்படுத்தி இருக்கிறார்.  இந்த தகவல்கள் அனைத்தும் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அப்படியே பகிரப்பட்டன. மேலும் டி.வி.யிலும் இந்த தகவல்களை கவனித்த அவர் கொதித்துவிட்டார். 


அதன் பின் தன்னை சந்திக்க வந்த குடும்ப நண்பரிடம் ”தினகரன் தனிக்கட்சி ஆரம்பிச்சு ஆளுங்கட்சிக்கு பிரச்னை கொடுக்குறான். அதே நேரத்துல இவன் (திவாகரன்) ஆளுங்கட்சியோடு நல்ல நட்புல இருக்குறதை பார்த்து சந்தோஷப்பட்டேன். என்ன இருந்தாலும் அ.தி.மு.க.வோட நட்பு நமக்கு வேணும், அதை திவாரகன் கவனிச்சுக்குறானேன்னு நிம்மதியா இருந்தேன். ஆனால் ஒரே நாள்ள எல்லாத்தையும் போட்டு உடைச்சு, நாசம் பண்ணிட்டான். அக்காவும், நானும் தி.மு.க.வை ஜென்ம விரோதியாகதான் பார்த்தோம், இப்பவும் என் மனசு அப்படித்தான். அப்பேர்ப்பட்ட என் குடும்பத்துல பொறந்த இவன், ஸ்டாலினுக்கு பக்கவாத்தியம் வாசிச்சுட்டு இருக்குறான். 


அப்பாவும், மகனுமா சேர்ந்து குடும்ப மானத்தையும், கட்சி மானத்தையும் வாங்கிட்டாங்க. திவாகரன் மகன் கல்யாணத்துக்கு பரோல் கேட்டு வரலாமுன்னு நினைச்சேன். ஆனால், அவங்க ரெண்டு பேரும் இப்ப பண்ணி வெச்சிருக்கிற காரியத்துக்கு நான் பரோல் கேட்கப் போறதில்லை. என் மூஞ்சியிலேயே முழிக்க கூடாதுன்னு திவாகரனை சொல்லிடுங்க. 
அவன் எனக்கு தம்பியுமில்லை, அவன் மகன் என் மருமகனுமில்லை. துரோகிங்க.” என்று கொதித்திருக்கிறார்.  சசியின் அடக்க முடியாத கோபம் அப்படியே திவாகரனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. மனுஷன்  கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறாராம். சின்னம்மா வெளியில் வந்ததும் பரபர ஸீன்ஸ் இருக்குது!

PREV
click me!

Recommended Stories

பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?