BREAKING ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை... பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு அறிக்கை..!

Published : Jan 21, 2021, 07:24 PM ISTUpdated : Jan 21, 2021, 07:27 PM IST
BREAKING ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை... பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு அறிக்கை..!

சுருக்கம்

ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை  சீராக உள்ளதாகவும் விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியுள்ளது. 

ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை  சீராக உள்ளதாகவும் விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியுள்ளது. 

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று போரிங் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது. சிடி ஸ்கேன் உள்பட சில வசதிகள் இல்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது. நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தைராய்டு ஆகிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!