கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்த முடியும்.. சசிகலாவுக்கு எதிராக கொதிக்கும் ஜெயக்குமார்

By vinoth kumarFirst Published Jan 31, 2021, 1:59 PM IST
Highlights

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில், தற்பொழுது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முன் பக்கத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. அவரை பின்தொடர்ந்து அமமுகவை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆகியோர் காரில் சென்றனர். தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகமாக குவிந்துள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனையடுத்து, தனியார் விடுதியில் சசிகலா 10 நாட்கள் ஓய்வெடுப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. 2017ம் ஆண்டிலேயே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் படங்களை பயன்படுத்தவும் சசிகலாவுக்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்துள்ளார்.

click me!