சசிகலாவுக்கு மூன்று வேளையும் அமைச்சர் வீட்டு சாப்பாடு : ஓசூரில் இருந்து இன்னோவா கார் மூலம் தினமும் சப்ளை!

 
Published : Apr 02, 2017, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
சசிகலாவுக்கு மூன்று வேளையும் அமைச்சர் வீட்டு சாப்பாடு :  ஓசூரில் இருந்து இன்னோவா கார் மூலம் தினமும் சப்ளை!

சுருக்கம்

sasikala food supply for minister home

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, ஓசூரில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வீட்டில் தினமும் உணவு தயாரிக்கப்பட்டு, இன்னோவா காரில் அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறை வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் சிரமமாக இருந்துள்ளது. ஆனால், தற்போது அது பழகிப் போய் விட்டது.

சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்குமே, இதுவரை  உடல் எடை எதுவும் குறையவில்லை. 

அந்த அளவுக்கு, காலை, மதியம், இரவு மூன்று வேளையும் ஓசூர் அருகில் உள்ள, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வீட்டில் இருந்துதான் உணவு ஜெயிலுக்குப் போகிறதாம்.

சசிகலாவுக்கும், இளவரசிக்கும் சமைப்பதற்காக ஸ்பெஷலாக சமையல்காரர்கள் இருவர் அமைச்சர் வீட்டில் நியமிக்கப்பட்டுள்ளனர். 

போயஸ் கார்டன் வீட்டில் இருந்த சமையல்காரர்கள் ஒரு வாரம் அங்கே சென்று தங்கி எப்படிச் சமைக்க வேண்டும், என்ன வகையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறி உள்ளனர்.

சிறையில், சாப்பிடுவது, தூங்குவது என்றே நேரத்தை கழிக்கிறார் சசிகலா.

யாராவது பார்ப்பதற்குப் போனால் மட்டும், அந்த அறையிலிருந்து வெளியே வந்து பேசிவிட்டுப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்