சசியின் ரெண்டாயிரம் கோடி மாற்றப்பட்ட பலே ரூட்டுகள் இதுதானாம்: வைரலாகும் லீக்டு ரகசியங்கள்.

By Vishnu PriyaFirst Published Dec 28, 2019, 6:23 PM IST
Highlights

சசிக்கு சில ஆயிரம் கோடிகள் மதிப்புடைய சொத்துக்கள் இருப்பது அவர் மூலமாகவே ஊர்ஜிதமாகி இருக்கிறது! என்று  அரசியல் விமர்சகர்களால் பேசப்படுகிறது. 

சிறைக்குள் இருந்தாலும் ஹாட் அரசியல் செய்திகளின் ராணிதான் நான்! என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சசிகலா.  நான்காண்டு சிறை தண்டனை முடிந்திட இன்னும் சில பல மாதங்கள் இருக்க, நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே ரிலீஸாக இருக்கிறார் சசி! என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவி வந்தது. அந்த சீசன் முடிந்து இப்போது புது சீசன் துவங்கியுள்ளது. அது ‘வேறொரு புது வழக்கில் விரைவில் கைதாகிறார் சசி’ என்பதுதான். காரணம்,  வருமான வரித்துறையின் கேள்விகள் சிலவற்றுக்கு சமீபத்தில் சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் ஒரு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதன்படி பார்த்தால்  ஜெயலலிதாவின் சொத்துக்களில் சசியும் பங்குதாரர்! அந்த வகையில் சசிக்கு சில ஆயிரம் கோடிகள் மதிப்புடைய சொத்துக்கள் இருப்பது அவர் மூலமாகவே ஊர்ஜிதமாகி இருக்கிறது! என்று  அரசியல் விமர்சகர்களால் பேசப்படுகிறது. ஆவணப்பூர்வமாக சசி இப்படி தன்னை சுற்றி ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், சும்மாவே அவரை வைத்து பரபரப்பை அசை போடும் நபர்கள் இப்போது தாறுமாறாக கெளப்ப துவங்கிவிட்டனர். 

அதில் ஒன்றாக மத்திய அரசு தனது கடந்த ஆட்சியின் போது கொண்டு வந்த ’பண மதிப்பிழப்பு’ நேரத்தில் சசிகலாவுக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம் கோடி மதிப்பிலான பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, புதிய ரூபாய்க்கு மாற்றிக் கொடுத்த சில நபர்களையும், அவர்கள் மாற்றிய வழிகளும்  லீக் ஆகியிருக்கிறது! என்கிறார்கள். மாற்றிக் கொடுத்த நபர்களை விடவும், மாற்றிய ரூட்டாக அவர்கள் சொல்லும் தகவல்கள் இதோ....“திருச்சிராப்பள்ளியை சேர்ந்த ஒரு நபர் அமெரிக்கா மற்றும் லண்டனில் உள்ள மிக முக்கியமான ஐந்து மருத்துவமனைகளில் அந்த சுமார் ரெண்டாயிரம் கோடிகளில் நான்கில் ஒரு பங்கை முதலீடு செய்து கொடுத்திருக்கிறார். இதன் மூலம் சசியின் சுமார் நானூற்று ஐம்பது கோடி பழைய நோட்டுகள் மதிப்பை தக்க வைத்துக் கொண்டதாம். பதவியை இழந்த மனிதர் ஒருவர் கிட்டத்தட்ட நூற்றுமுப்பது கோடி ரூபாய் பணத்தை ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலுள்ள டிராவல்ஸ், மது தயாரிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கைமாற்றிவிட்டு அதை புதுப்பணமாக்கினாராம். 

தஞ்சை பகுதியை சேர்ந்த மிக முக்கிய நபர் ஒருவர் ஊழலில் சிக்கிய ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தலையில் பல நூறு கோடிகளை தூக்கி வைத்து ‘இதை சின்னம்மாவுக்கு மாத்திக் கொடுத்துடு. உன் கம்பெனி கேஸை நாங்க பார்த்துக்குறோம்.’என்று சொல்லி கைகொடுத்தாராம். அதே தஞ்சைக்கு பக்கத்து ஏரியாவை சேர்ந்த இன்னொரு முக்கியபுள்ளியோ கொங்கு தமிழகத்தை சேர்ந்த பெரும் பெரும் மில் அதிபர்களிடம் மீது சில நூறு கோடிகளைக் கொடுத்து அவற்றை மதிப்புடைய புது கரன்ஸியாக மாற்றித் தர வைத்திருக்கிறார். இப்படித்தான் சசியின் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புதிய பணமாக மாற்றப்பட்டன. இந்த விவகாரம் மீதான விசாரணை துவங்கிவிட்டது, இந்த புதிய சர்ச்சையில் சசியும் கைதாவார். கூடவே அவருக்கு கைகொடுத்த நான்கு முக்கிய மனிதர்களும் சிக்கி சிறை செல்வார்கள்.” என்கிறார்கள். 

click me!