சசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம்... அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!

Published : Nov 15, 2020, 06:01 PM IST
சசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம்... அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

சசிகலாவின் மூத்த அண்ணனும் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் (78) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலாவின் மூத்த அண்ணனும் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் (78) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சசிகலாவின் மூத்த அண்ணனும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம்  உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் மேலவஸ்தசாவடியில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அமமுக மற்றும் அதிமுக பல்வேறு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். டாக்டர் வெங்கடேஷ் சுந்தரவதனத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!