கொரோனா பாதித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

Published : Nov 15, 2020, 05:29 PM IST
கொரோனா பாதித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

சுருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பணக்காரர், ஏழை, அரசியல்வாதி என  உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(71). கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கொரோனாவிலிருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில், குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் நேற்று அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அகமது படேல் மகன் பைஷல் டுவிட்டரில் பதிவில்;- கடந்த சில வாரங்களுக்கு முன் அகமது படேலுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கிறோம். தற்போது உடல்நலக்குறைவால் குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐசியு சிகிச்சைப் பிரிவில் அகமது படேல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் விரைவாக குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!