
அதிமுக சட்டமன்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யபட்டார்.
அதை ஓபிஎஸ் முன்மொழிய அனைவரும் அங்கீகரித்தனர்.
அதிமுக போதுசெயலாளராக இருக்கும் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பத்தில் வைக்கபட்டது.
பின்னர் கட்சி தொண்டர்கள் இடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே வர்தா புயல்,ஜல்லிக்கட்டு போன்றவை காரணமாக ஓபிஎஸ்ஸின் புகழ் அதிகரித்து வருவதால் இனியும் தாமதித்தால் ஓபிஎஸ் நின்று விடுவார் என்ற காரனத்தால் சசிகலா முதல்வராக ஆவதற்காக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதில் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது..
அதன்படி இன்று கூடிய கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை முதல்வர் ஓபிஎஸ் முன்மொழிந்தார்.இதை அனைவரும் ஏற்றுகொண்டனர்.
இதன் மூலம் சசிகலா முதலமைச்சர் ஆகிறார்.
எம்எல்ஏக்களுடைய பரிந்துரை கடிததை விரைவில் கவர்னரை சந்தித்து சசிகலா அளிப்பார்.
இதையடுத்து முதல்வராக தேர்வு செய்யபடுவார்.