சசிகலா ஆடியோ கால் பதிவு... கையும் களவுமாக சிக்க வைக்க ஓ.பி.எஸ்- எடப்பாடி திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2021, 5:54 PM IST
Highlights

மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலரும் இவ்விஷயத்தில் சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து போட மாட்டோம் என்று எஸ்கேப்பாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து போட அதிமுகவினரே லஞ்சம் வாங்கியதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக கட்சியிலேயே அணி நிர்வாகிகளிடம் பேசும்  ஆடியோ பதிவுகளை சசிகலா வெளியிட இரட்டை தலைமையிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனால் சுதாரித்த ஓ.பி.எஸ்- எடப்பாடி ஆகிய இருவரும் சசிகலாவிடம் பேசியவர்களை கட்சியை விட்டு வெளியேற்றி வருகின்றனர். அதோடு சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டம் போட்டு சசிகலாவை கண்டித்து தீர்மானம் போட்டதுடன், அவருக்கு அதிமுகவில் இடமில்லை என்றாராம். அதேபோல் ஒவ்வொரு  மாவட்டத்திலும் கூட்டம் போட்டு கண்டன தீர்மானம் போடும்படி உத்தரவும்  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றுள்ளது. அதற்கேற்ப கூட்டம் நடத்த வேலூர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சசிகலாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கண்டன தீர்மானத்தில் கையெழுத்து போட்டவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டவில்லை என்கிறார்கள். இதனால் கரன்சி கொடுத்து கையெழுத்து வாங்கும்  படலம் தீவிரமாகியுள்ளதாக கூறுகிறார்கள்.   அதில் குடியாத்தம் உள்ளிட்ட சில பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வீரமணியின் எல்லைக்கு உட்பட்ட ஒன்றியங்கள், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலரும் இவ்விஷயத்தில் சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து போட மாட்டோம் என்று எஸ்கேப்பாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் கட்சி யார் கைக்கு போகப்போகிறதோ... அதனால் ஆதாரத்துடன் சிக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். 

click me!