சசிகலாவின் 2,000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்... வருமான வரித்துறை அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 7, 2020, 4:04 PM IST
Highlights

சசிகலாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்,உள்ளிட்ட ரூ.2000 கோடி சொத்துக்கள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. 

சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களும் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை கைப்பற்றுவதை தடுக்கவும் அவரது அரசியல் நடவடிக்கைகளை முடக்கவும் மோடி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள்  கூறுகின்றனர்.

2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை சசிகலா இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தண்டனை முடிந்து இன்னும் சில மாதங்களில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அதிர்ச்சி தரும் வகையில் அவர்களுக்கு சொந்தமான ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

click me!