அதிமுக - பாஜக இணைந்து தான் ஆட்சி அமைக்கும்... எடப்பாடிக்கே ஷாக் கொடுத்த எல்.முருகன்...!

By vinoth kumarFirst Published Oct 7, 2020, 3:57 PM IST
Highlights

2021 சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

2021 சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனிதனியே ஆலோசனை நடத்தினர். பின்னர், ஒருவழியாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி என்று ஓ,பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால் 2021ம் ஆண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என அதிமுக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக  பாஜக  தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், பேசிய அவர் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக- கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 2016 ல் தனித்துப் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்ததாகவும், இந்த முறையும் பெருவாரியாக நிர்ணயிக்கும் என்றார்.

முன்னதாக அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போது அறிவிக்க வேண்டிய தேவையில்லை. தேர்தல் நேரத்தில் தான் அதிமுக – பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். இருந்தாலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!