அதிமுக கொடியுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கெத்தாக என்ட்ரி.. எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலா..!

Published : Jul 20, 2021, 01:46 PM ISTUpdated : Jul 20, 2021, 01:47 PM IST
அதிமுக கொடியுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கெத்தாக என்ட்ரி.. எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலா..!

சுருக்கம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனுக்கு திடீரென மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வருகை தந்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனுக்கு திடீரென மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின. இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்;- கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்.  தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். இதனையடுத்து, சசிகலா மருத்துவர்கள் மற்றும் மதுசூதனனின் குடும்பத்தினரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

அந்த நேரம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனையில் மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்த போது சசிகலா காரில் அதிமுக கொடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!