நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் சசிகலா, டிடிவி தினகரன் தான்! துரோகி இபிஎஸ்! வைத்தியலிங்கம் ஆவேசம்.!

By vinoth kumar  |  First Published Jun 13, 2023, 6:46 AM IST

மின்வெட்டு, கள்ளச்சாராயம் என திமுக ஆட்சியில் நாடு சீரழிந்துகொண்டுள்ளது. எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக் கொள்ளலாம். துரோகிகள் அதிமுக ஆளுங்கட்சியாக வருவதைத் தடுத்துவிட்டார்கள். அதை நிறைவேற்றத்தான் அதிமுகவும் அமமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயல்பட இருக்கிறது.


எடப்பாடி பழனிசாயிடம் இரட்டை இலை இல்லை என்றால் ஒரு தொகுதியை 1000 வாக்குகள் வாங்க  முடியாது என வைத்தியலிங்கம் விமர்சனம் செய்துள்ளார். 

ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும்  ஓபிஎஸ் அணியின் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசுகையில்;- சுயநலக்காரராக உள்ள எடப்பாடி பழனிசாமியால் தான் 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் இன்று அதிமுக தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 524 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்! அதிமுக - பாஜக ஷாக் !!

மின்வெட்டு, கள்ளச்சாராயம் என திமுக ஆட்சியில் நாடு சீரழிந்துகொண்டுள்ளது. எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக் கொள்ளலாம். துரோகிகள் அதிமுக ஆளுங்கட்சியாக வருவதைத் தடுத்துவிட்டார்கள். அதை நிறைவேற்றத்தான் அதிமுகவும் அமமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயல்பட இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் தோல்வியுடுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். ஒரத்தநாட்டில் பேசிய யாரோ ஒருவர் சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ் அணியினர் கத்திரிக்கோல் சின்னத்தில் தான் நிற்க முடியும் என்று போன கூட்டத்தில் பேசி உள்ளார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் கத்திரிக்கோல் சின்னத்தில் நிற்க நாங்கள் தயார். பிளேடு சின்னத்தில் நீங்க நிற்க தயாரா என சவால் விடுத்துள்ளார். எங்களை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கினால்  நாங்கள் அதிமுகவை விட்டு விலக தயார் என வைத்திலிங்கம் கூறினார். 

இதையும் படிங்க;- அமைச்சர் மனோ தங்கராஜ் - மேயர் மகேஷ் இடையே உச்சக்கட்ட மோதல்? இப்படியே போச்சுனா அவ்வளவு தான்! எச்சரித்த கனிமொழி?

எடப்பாடியிடம் இரட்டை இலை  இல்லை என்றால் ஒரு தொகுதியை 1000 வாக்குகள் வாங்க  முடியாது. நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் சசிகலா, டிடிவி தினகரன், திவாகர் ஆகியோர்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு செய்ததை விட தஞ்சை மாவட்டத்திற்கு நான் நிறைய செய்துள்ளேன் என வைத்தியலிங்கம் கூறினார்.

இதையும் படிங்க;-  கரை சேர முடியாமல் நட்டாற்றில் தத்தளித்த அதிமுகவை காப்பாற்றியது நாங்கல்தான்.. செல்லூர் ராஜூவுக்கு பாஜக பதிலடி.!
 

click me!