சசிதரூர் எம்பியால் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்தது கலகம்!! அனலாய் கொதிக்கும் காங்.தலைகள்.!!

Published : Feb 21, 2020, 08:52 AM IST
சசிதரூர் எம்பியால்   காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்தது கலகம்!! அனலாய் கொதிக்கும் காங்.தலைகள்.!!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியில் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களுக்கு தோ்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் கட்சிக்குள் இருந்து முதல் கலகத்தை ஆரம்பித்திருக்கிறார்.  

T.Balamurukan
காங்கிரஸ் கட்சியில் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களுக்கு தோ்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர்,  சந்தீப் தீக்ஷித்   ஆகியோர் கட்சிக்குள் இருந்து முதல் கலகத்தை ஆரம்பித்திருக்கிறார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக படுதோல்வியை சந்தித்தது.ஒரு இடத்தைக்கூட கைப்பற்றமுடியவில்லை எனக்கூறி ட்விட்டர் பதில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

சந்தீப் தீக்ஷித் வெளிப்படையாகக் கூறிய கருத்தையே, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவா்கள் மறைமுகமாகத் தங்களுக்குள் கூறிக் கொண்டிருக்கின்றனா். கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவா்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது. கட்சியின் தொண்டா்களை ஊக்கப்படுத்தவும், வாக்காளா்களைக் கவரவும் கட்சித் தலைமைப் பதவிகளுக்கான தோ்தலை செயற்குழு நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் உள்ளிட்டவற்றை விரைவில் நடத்த வேண்டும். இதே கருத்தை 8 மாதங்களுக்கு முன்பும் தெரிவித்திருந்தேன் என்று சசி தரூா் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரைத்தொடர்ந்து,டெல்லி தேர்தல் படுதோல்விக்கு காரணமே கட்சியில் மூத்த தலைவா்கள் இல்லாதது தான். பலரும் கட்சித் தலைமை குறித்து தங்களது அதிருப்தி கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனா். அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்ஷித் அண்மையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.அதில்,'காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் பெரும் சவாலன பிரச்சனை, முறையான தலைமை காணப்படாததே ஆகும். இத்தனை மாதங்களுக்குப் பிறகும் கட்சிக்கான புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க மூத்த தலைவா்கள் தவறிவிட்டனா்' என்கிறார்.

இதே நிலை காங்கிரஸ் கட்சியில் நீடித்தால் ,இருக்கும் கொஞ்ச தொண்டர்களையும் காங்கிரஸ் இழந்து கடையை நிரந்தரமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!