கடல் தாண்டிய எட்டாயிரம் கோடி சசி டீமுடையதா?: அதிரவைக்கும் ஹவாலா எகிடுதகிடு.

 
Published : Dec 08, 2017, 10:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
கடல் தாண்டிய எட்டாயிரம் கோடி சசி டீமுடையதா?: அதிரவைக்கும் ஹவாலா எகிடுதகிடு.

சுருக்கம்

sasi groups 8000 hawala money transfer to singapore

ஒரு பொட்டிக் கடை வைக்க  எட்டாயிரம், பத்தாயிரம் ரூபாய் திரட்ட முடியாமல் சாமான்ய தமிழனுக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெரிய குடும்பத்தின் எட்டாயிரம் கோடி ரூபாயை சிங்கப்பூருக்கு ஹவாலா செய்து கொடுத்திருக்கிறாராம் ஒரு வங்கியின் மேலாளர்!

கேட்கவே அதிர்ச்சியை கிளப்பும் இந்த விவகாரத்தின் முழு விபரங்களும் இங்கே...

கடந்த 2016 நவம்பரில் திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து பிளாக் மணி பார்ட்டிகளுக்கு எனிமா கொடுத்தார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் கோடி கோடி கோடிகளை வெள்ளையாக்க பேயாய்ப் பறந்தன பல பெரும் பணத்திமிங்கலங்கள். இதைப் பயன்படுத்தி நிதித்துறையிலுள்ள சில பெரும் அதிகாரிகள் ஏஜெண்டுகளாய் செயல்பட்டு பெரும் லாபம் பார்த்தது தனிக்கதை. 

இந்த சூழலில் தமிழகத்தை நிர்வகிக்கும் அதிகார மையத்தின் நிழலாய் இருந்த பெண்ணின் குடும்பமும் தங்களிடமிருந்த பல ஆயிரம் கோடி ரூபாயை பாதுகாக்க அதை ஃபாரீனில் முதலீடு செய்ய முயன்றதாம். இந்த வேலையை எடுத்துச் செய்யும் அஸைன்மெண்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார் நீலகிரி மாவட்டத்திலுள்ள மிக முக்கியமான எஸ்டேட் பகுதியில் செயல்படும் ஒரு வங்கியின் மேலாளர். 

அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான எட்டாயிரம் கோடி ரூபாயை சிங்கப்பூரில் முதலீடு செய்து கொடுத்திருக்கிறாராம். இதற்காக கைகொடுத்தவர் சென்னையை சேர்ந்த ஸ்டீல் தொழில் அதிபராம். அடிப்படையில் இவர் ஒரு மார்வாடியாம். 

இதில் கவனிக்கத்தக்க விஷயமென்னவென்றால் சமீபத்தில் சசிகலா - தினகரன் வட்டாரத்தில் ரெய்டு நடந்தபோது இந்த மார்வாடியின் வளாகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் ரெண்டு தரப்புக்கும் நடுவில் லிங்க் இருக்கிறதா? வங்கி மேலாளர் சொல்லக்கேட்டு மார்வாடி சிங்கப்பூருக்கு கைமாற்றிய பணம் இந்த டீமுடையதுதானா? என்பதுதான் இப்போது அதிகாரிகளை குடையும் கேள்வி. 

சசி குடும்ப ரெய்டின் போதே இந்த வங்கி அதிகாரி வீட்டிலும் சப்தமில்லாமல் ரெய்டு நடத்தியதாம் ஐ.டி. துறை. ஆனால் இப்படியொரு புயலடிக்கும் என முன்பே கணித்து ‘அம்மா நெஞ்சு வலிக்குதே’ என்றபடி கோயமுத்தூரிலிருக்கும் ஒரு பெரிய மருத்துவமணையில் படுத்துவிட்டாராம் அந்த நபர். விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லையாம். 

கூடிய விரைவில் இவரை வலுக்கட்டாயமாக அள்ளிக் கொண்டு போய் விசாரிப்பார்கள் என தெரிகிறது. இந்த சூழ்நிலை நடக்கும்போது 8000 கோடியை கைமாற்றியதில் உதவிய சிங்கப்பூர் மண் அதிகாரிகள் சிலரும் சிக்கலாம் என்கிறார்கள். 

எட்டாயிரம் கோடியும் அப்படியே மீட்கப்பட்டால், தமிழகத்தில் சம்பாதிக்கப்பட்ட அந்த சொத்தை தமிழகத்திலேயே உள்ள பல ஏழை குடும்பங்களின் கணக்கில் போட்டுவிட்டு வாழ வைப்பாரா மோடி?

PREV
click me!

Recommended Stories

ஒரு அரசன் வருவான்..! கிறிஸ்துமஸ் விழாவில் கடவுள் நம்பிக்கை..! திமுகவால் சுதாரித்த விஜய்..!
திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!