சார்பட்டான்னா கலைஞர் தான்... அடித்துச் சொல்லும் சுந்தரவல்லி..!

Published : Jul 26, 2021, 06:04 PM IST
சார்பட்டான்னா கலைஞர் தான்... அடித்துச் சொல்லும் சுந்தரவல்லி..!

சுருக்கம்

சார்பட்டா படம் திமுகவுக்கு புகழாரம் சூட்டவில்லை. பா.ரஞ்சித் திமுகவை உயர்த்திப் பிடிக்கவில்லை. எதார்த்தத்தை பேசியுள்ளார் என்பதே உண்மை’’ பேராசிரியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

சார்பட்டா படம் திமுகவுக்கு புகழாரம் சூட்டவில்லை. பா.ரஞ்சித் திமுகவை உயர்த்திப் பிடிக்கவில்லை. எதார்த்தத்தை பேசியுள்ளார் என்பதே உண்மை’’ பேராசிரியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ’’போய்வா நதி அலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா எனப்பாடுவார்.. நீர் கொண்டுவர வேண்டுபவர் எதற்கு லதாவை பக்கத்தில் வைத்து பாட வேண்டும்? காதலிக்கும்போது எதற்கு ஏழைக்கு நீர் கேட்கணும்? இப்படி நிறைய முரண்பாடுகள் உண்டு. ஆனால், சர்பட்டா படத்தில் பெண்களின் பாத்திரம் அடிப்படை கட்டுமானமாக உள்ளது. சார்பட்டா பரம்பரைக்கு திமுக அரசு பல வகைகளில் உதவி இருக்கிறது. துறைமுகத்தில் வேலைவாய்ப்புகளை கருணாநிதி வழங்கி இருக்கிறார். 1975ல் எமர்ஜென்சி வந்தபோது கருணாநிதிதான் முதல்வர். அப்படியானால் கருணாநிதியை தான் காட்ட முடியும். எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ படத்துக்காக வலிந்து திணிக்கக்கூடாது. படம் தெளிவாக போகிறது. சமகாலகட்டத்தில் சர்பட்டா மரம்பரைக்கு உதவியர்களை பேசியே ஆக வேண்டும்.  

எமர்ஜென்சி காலத்தில் தமிழகத்தில் ஒன்றும் செய்யமுடியாது என்பதற்காகவே இந்திராகாந்தி திமுக ஆட்சியை களைத்தார். இந்தியா முழுவதும் வன்முறைகள் நடைபெற்றபோதும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழந்தது. காரணம் கருணாநிதி. அப்படிப்பட்ட முதல்வரையும், திமுகவையும் பற்றி பேசாமல் எப்படி படம் எடுப்பது. ஆகையால் சார்பட்டா படம் திமுகவுக்கு புகழாரம் சூட்டவில்லை. பா.ரஞ்சித் திமுகவை உயர்த்திப் பிடிக்கவில்லை. எதார்த்தத்தை பேசியுள்ளார் என்பதே உண்மை’’ என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்