சங்பரிவாரும் நாங்களும் ஒன்றுதான்!:திராவிட கழக வீரமணியின் திடீர் பட்டாசு, ஓ மைகாட்! பஞ்சாயத்து.

By Vishnu PriyaFirst Published Sep 12, 2019, 11:40 AM IST
Highlights

தி.மு.க.வின் கிளைக்கழகம்! என்று திராவிட கழகத்தை வைத்துக் கிழி கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.

தி.மு.க.வின் கிளைக்கழகம்! என்று திராவிட கழகத்தை வைத்துக் கிழி கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா. அதன் தலைவர் கி.வீரமணியை,  கருணாநிதியின் பேரனும், அழகிரியின் மகனுமான துரைதயாநிதி எந்தளவுக்கு இகழந்து ட்விட் பண்ணுவார் என்பதும் தமிழக அரசியலரங்கம் அறிந்ததே. 

ஆனாலும் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், பெரியாரின் கொள்கைகளை  தி.மு.க. மேடைகளிலும் நின்று கம்பீரமாக பரப்பிக் கொண்டிருக்கிறார் வீரமணி. அதேவேளையில் ’நம்ம மேடையில் நின்று இந்துக்களுக்கு எதிராக இவர் பேசுறதாலேதான் இந்துக்களின் வாக்குகள் நமக்கு பெருசா விழமாட்டேங்குது!’ என்று ஸ்டாலினிடம் அவர் கட்சியின் முக்கியஸ்தர்கள் எரிச்சலைக் கொட்டுவதும் தொடர்கிறது. 

இந்நிலையில் கி.வீரமணி சமீபத்தில் ரஜினிகாந்த், வைணவ பேராசிரியர் வேங்கட கிருஷ்ணன் ஆகியோரை பற்றி  ஒரு அதிரடி பேட்டியை தட்டிவிட்டுள்ளார். அதில் “இங்கே ஒரு போதும் தாமரை மலராது, மலரவும் முடியாது. இது திராவிட மண், பெரியாரின் மண். ஏனென்றால் இது திராவிட  மண், பெரியாரின் மண். வேறு எதையும் யோசிக்க வேண்டாம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கும், அதை கூட்டணியில் சேர்த்திருந்த அ.தி.மு.க.வுக்கும் என்ன நேர்ந்தது என்பதை தேசம் அறியும். இதுதான் தாமரையின் நிலை. 
இந்த மண்ணில் கொள்கை ரீதியான போர்தான் நடந்து கொண்டிருக்கிறது. தனி நபர்களின் பெருமையோ, திறமையோ இங்கு சாதித்துவிட முடியாது. 

திரையுலகில் ரஜினிகாந்த் பிரபலமானவராக இருக்கலாம். ஆனால் அவர் உட்பட யாரைத் தலைவராக போட்டாலும் இந்த மண்ணில் தாமரை ஒரு போதும் மலராது. வேங்கடகிருஷ்ணன் சாதியை நியாயப்படுத்தி பேசுகிறார். அவருக்கு ஒரு நோய் வந்தால், தன் சாதிக்கார மருத்துவரிடம் மட்டும்தான் சிகிச்சைக்கு போவாரா? கேவலம் இந்த வர்ணாசிரம சிந்தனையானது ஒரு பேராசிரியரிடமும் கூட இருக்கிறதே. இந்த சாதி பேத சிந்தனைகளை அழிக்கத்தான் பெரியார் இன்னமும் இந்த மண்ணில் தேவைப்படுகிறார். 

பெரியாரின் காலத்தை விட எங்கள் பணி பல மடங்கு அதிகரித்துள்ளது. சங்பரிவார் பல பிரிவுகளாக இருந்து வேலை  செய்கிறார்கள். அதுபோலவேதான் பெரியாரிய சிந்தனையாளர்கள் தனித்தனியாக செயல்படுகிறார்கள்.” என்று தாங்களும், சங்பரிவாரும் ஒரே ஸ்டைலில் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார் வீரமணி.
சர்தான்!

click me!