பா.ம.க.வை ஒழித்துக்கட்ட வேல்முருகனுடன் கைகோர்த்த காடுவெட்டி குரு சகோதரி, சந்தன வீரப்பன் மனைவி...

Published : Apr 01, 2019, 09:33 AM IST
பா.ம.க.வை ஒழித்துக்கட்ட வேல்முருகனுடன் கைகோர்த்த காடுவெட்டி குரு சகோதரி, சந்தன வீரப்பன் மனைவி...

சுருக்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சியில் மறைந்த பா.ம.க. தலைவர் காடுவெட்டி குருவின் சகோதரி மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர்  இணைந்துள்ளதை அடுத்து அவர்களை வைத்து அதிரடி பிரச்சாரம் செய்ய அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளதால் பாமகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

பாமகவின் முக்கிய தலைவராக விளங்கிய காடுவெட்டி குரு சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு பாமகவினர் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, நேற்று வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். அதேபோல் சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். இருவரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுவில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரையும் இணைந்த விழாவில் பேசிய வேல்முருகன், 'நான் வாக்குறுதி தரமாட்டேன்; ஆனால் செய்ய வேண்டியதை செய்வேன். இருவர் மீது இனியும் ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வது எனது கடமை' என்று கூறினார்.

அடுத்து பேசிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, “என் கணவர் வீரப்பனின் கனவு வேல்முருகன் மூலம்தான் நிறைவேறும். பாமர மக்களுக்காக பாடுபட்டவர் என் கணவர்

” என்றார்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..