சாமி ரூம்ல சரசலீலை நடத்தறீங்க... உங்க பக்தி பீரிட்டு எகுருதுடா சாமி... இஸ்லாமிய இயக்குநரின் முரட்டுக் குத்து!

By Thiraviaraj RMFirst Published Aug 25, 2021, 4:57 PM IST
Highlights

அபிஷ்டுகளா! ஆச்சாரம், அனுஷ்டானம், ஆஹமம், லோகம் நன்னாருகாது. பெருமாள் வெளிய போயிடுவா, அதுஇதுனு புருடா உட்டிங்க. இப்ப சாமி ரூம்ல சரசலீலை நடத்தறீங்க. 

மூடர் கூடம், கொளஞ்சி, அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னிசிறகுகள் போன்ற படங்களை இயக்கியவர் , இயக்கி வருபவர் ’மூடர்கூடம்’ நவீன். நேற்று பாஜக தமிழக செயலாளர் கே.டி.ராகவன் ஒரு பெண்ணிடம் பேசும்போது அநாகரிகமாக நடந்த வீடியோ கால் பதிவு மதனின் யூடியூப் பக்கத்தில் வெளியானது.

இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உரிய விளக்கமளித்து இருந்த நிலையில், வீடியோவை வெளியிட்ட மதனும், வெண்பாவும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக கரு நாகராஜன் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பாஜகவை சேர்ந்த மல்ர்கொடி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட பெண்ணோ, பாஜகவை சார்ந்தவர்களோ குற்றச்சாட்டுக்கு உள்ளான கே.டி.ராகவன் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட இது உட்கட்சி விவகாரமாகவே கருதப்படுக்கிறது. ஆனால், இதனை வைத்து எதிர்கட்சிகளும், பாஜக எதிர்ப்பு நிலையில் உள்ள மாற்று மதத்தினரும் சர்ச்சையாக்கி வருகிறனர். கட்சி சார்பாகவோ, சம்பந்தப்பட்டவரின் மீதோ குற்றம்சாட்டினால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் மதம் சார்ந்த கடவுளையும் விமர்சிப்பது இந்து மதத்தினரிடையே உள்ளக்கிளறல்களை ஏற்படுத்தி உள்ளது. 

அபிஷ்டுகளா! ஆச்சாரம் அனுஷ்டானம் ஆஹமம், லோகம் நன்னாருகாது, பெருமாள் வெளிய போயிடுவா, அதுஇதுனு புருடா உட்டிங்க. இப்ப சாமி ரூம்ல சரசலீலை நடத்தறீங்க. உங்க பக்தி பீரிட்டு எகுருதுடா சாமி!

— Naveen Mohamedali (@NaveenFilmmaker)

 

அதுவும் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் இந்த விவகாரத்தை மதப்பிரச்னையாக தூண்டி விட்டு, இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் தங்களது சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  அந்த வகையில் ’மூடர்கூடம்’ இயக்குநர் தான் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவன் என்பதால் அந்த மதத்திற்கு ஆதரவாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் எப்போதும் கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். இப்போது கே.டி.ராகவன் விவகாரத்தையும் ‘கையிலெடுத்து’ கிளம்பியுள்ளார். 
 
அவரது ட்விட்டர் பதிவில், ‘’அபிஷ்டுகளா! ஆச்சாரம், அனுஷ்டானம், ஆஹமம், லோகம் நன்னாருகாது. பெருமாள் வெளிய போயிடுவா, அதுஇதுனு புருடா உட்டிங்க. இப்ப சாமி ரூம்ல சரசலீலை நடத்தறீங்க. உங்க பக்தி பீரிட்டு எகுருதுடா சாமி!’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் பலரும், உங்கள் சமூகம் சார்ந்து நடக்காத பாலியல் வன்முறைகளா? ஆப்கானிஸ்தானில் பெண்களின் சடலங்களுடன் வன்புணர்வர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் எனக் எதிர்க் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

click me!