முதல்வரின் உத்தரவை மதிக்காத சேலம் மேக்னசைட் நிறுவனம்.. வெளிமாவட்ட தொழிலாளர்களை பழிவாங்குவதாக புகார்.!!

By T BalamurukanFirst Published Jun 2, 2020, 9:51 PM IST
Highlights

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. "பேரிடர் காலத்தில்எந்த ஊழியர்களின் சம்பளத்தையும் நிறுவனங்கள் பிடிக்க கூடாது அவர்களுக்கான பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்" 

சேலத்தில் தமிழ்நாடு மேக்னசைட் கனிதாது உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறன்றது.இங்கு கிடைக்கும் கனிமம் அரிய வகையானது. இது போன்ற கனிமங்கள் கர்நாடகா ஜம்மு காஷ்மீர் உத்தரஞ்சால் போன்ற மாநிலங்களில் இது காணப்படுகிறது.


இங்கு 270 பணியாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணி செய்து வருகிறார்கள். 2018ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் இருந்து இந்த தொழிற்சாலைக்கு தடையில்லா சான்று வழங்கப்பட வில்லை.அனுமதிக்கப்பட்ட அளவைவிட கனிமங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த சான்று கிடைக்காமல் போனது. இதனால் அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை இயங்காமலே இரண்டு வருடம் சம்பளம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.


இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பித்தது மத்திய அரசு.3வது ஊரடங்கு தளர்வுகளில் 33 சதவீகிதம் பணியாளர்களுடன் தொழிற்சாலை இயங்கலாம் என்று அரசு அறிவித்த போது பொது போக்குவரத்து இல்லாததால் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் யாரும் சொந்த ஊரில் இருந்து திரும்ப முடியாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை. 4வது ஊரடங்கு தளர்வுகளில் 50 சதவிகிதம் தொழிலாளர்களுடன் தொழிற்சாலை இயங்க அரசு அனுமதி வழங்கியது.


வெளிமாவட்டங்களில் இருக்கும் தொழிலாளர்களை வேலைக்கு திரும்ப வரகட்டாயப்படுத்தக்கூடாது அவர்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்று தமிழக தலைமைச்செயலாளர்  சண்முகம் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருடன் நடந்த கூட்டத்தில் உத்தரவிட்டிருந்தார்.இதே கருத்தை சேலம் மாவட்ட ஆட்சியரும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. "பேரிடர் காலத்தில்எந்த ஊழியர்களின் சம்பளத்தையும் நிறுவனங்கள் பிடிக்க கூடாது அவர்களுக்கான பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.


ஆனால் மத்திய அரசு, மாநில அரசு உத்தரவை பொதுத்துறை நிறுவனமான சேலம் மேக்னசைட் நிறுவனம் அங்கு பணிபுரியம் நான்கு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று விசாரித்தால்... இவர்கள் ஊரடங்கில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வேலைக்கு வராமல் இருப்பதால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்கிறார்கள்.


 

click me!