நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதி... ஊழலின் தந்தை கருணாநிதி..ட்விட்டரில் திமுகவினர் Vs எதிர்ப்பாளர்கள் குஸ்தி!

By Asianet Tamil  |  First Published Jun 2, 2020, 9:28 PM IST

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சமூக ஊடகங்களில் திமுகவினர், கருணாநிதியின் படத்துடன் ‘ நவீன தமிழகத்தின் தந்தை’ என்ற பொருளில் ‘Father of modern Tamil nadu' என்ற வாசகத்துடன் கூடிய படத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். திமுக முன்னணி தலைவர்கள் உள்பட பலரும் இதை சமூக ஊடங்களில் தங்களுடைய முகப்பு படங்களாக வைத்துவருகிறார்கள். மேலும் கருணாநிதி ஆட்சியின் சாதனைகளையும் பகிர்ந்துவருகிறார்கள்.
 


மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் திமுக - திமுக எதிர்ப்பாளர்களுக்கு இடையே குஸ்தி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா நாளை (ஜூன் 3) கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்த நாளை, மக்களுக்கு உதவும் நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.


இந்நிலையில் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சமூக ஊடகங்களில் திமுகவினர், கருணாநிதியின் படத்துடன் ‘ நவீன தமிழகத்தின் தந்தை’ என்ற பொருளில் ‘Father of modern Tamil nadu' என்ற வாசகத்துடன் கூடிய படத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். திமுக முன்னணி தலைவர்கள் உள்பட பலரும் இதை சமூக ஊடங்களில் தங்களுடைய முகப்பு படங்களாக வைத்துவருகிறார்கள். மேலும் கருணாநிதி ஆட்சியின் சாதனைகளையும் பகிர்ந்துவருகிறார்கள்.
இதற்குப் போட்டியாக திமுக எதிர்ப்பாளர்கள், ‘ஊழலின் தந்தை’ என்ற பொருளில் ‘Father of Corrouption' என்ற வாசகத்துடன் கூடிய படத்தைப் பகிர்ந்துவருகிறார்கள். இந்தப் படத்தை அதிமுகவினர், பாஜகவினர் அதிகளவில் பகிர்ந்து கருணாநிதியை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுவருகிறார்கள். இந்த இரு வாசகங்களும் ட்விட்டரில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. மேலும் திமுகவினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சமூக ஊடங்களில் குஸ்தியும் ஏற்பட்டுள்ளது.  

Tap to resize

Latest Videos

click me!