அதிமுக மூத்த நிர்வாகிகள் பாதுகாப்பில் சாதிக் பாட்சா மனைவி..! தேர்தலுக்கு முதல் நாள் வைக்கப்போகும் அணுகுண்டு..!

By Selva KathirFirst Published Apr 12, 2019, 9:34 AM IST
Highlights

அதிமுக மூத்த நிர்வாகிகள் பாதுகாப்பில் இருக்கும் காரணத்தினால் தான் சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானு குடியரசுத் தலைவர் மாளிகை வரை சென்று திமுகவிற்கு எதிராக புகார் அளித்த திரும்பியுள்ளார்.

அதிமுக மூத்த நிர்வாகிகள் பாதுகாப்பில் இருக்கும் காரணத்தினால் தான் சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானு குடியரசுத் தலைவர் மாளிகை வரை சென்று திமுகவிற்கு எதிராக புகார் அளித்த திரும்பியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் சாதிக் பாட்சா. பெரம்பலூரைச் சேர்ந்த இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மிக நெருங்கிய நண்பர். ஆ.ராசாவின் தொழில் நடவடிக்கைகள் அனைத்தையும் சாதிக் பாட்சா தான் கவனித்து வந்தார் என்று கூறுவார்கள். ஆ.ராசாவின் பினாமி தான் சாதிக் பாட்சா என்று கூறுபவர்களும் உண்டு. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விஸ்வரூபம் எடுத்தபோது சிபிஐ அதிகாரிகள் ராசா தொடர்புடைய அனைவரது வீடுகளிலும் சோதனை செய்தனர். அப்போது சாதிக் பாட்சாவின் வீடு அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அங்கு சிக்கிய சில ஆவணங்கள் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவினருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட சாதிக் பாட்சா வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு ஒப்புக்கொண்டதாக சிபிஐ தரப்பில் தகவல் கசிந்தது. இதனையடுத்தே மர்மமான முறையில் சாதிக் பாட்சா மரணம் அடைந்தார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தினத்தில் அவருடன் அவரது மனைவி இருந்தார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டபோது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரு கட்சியின் சில நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்து அவரது மனைவி ரேகா பானுவை வெளியே அனுப்பி வைத்துவிட்டு சாதிக் பாட்சாவிடம் பேசி சென்றுள்ளனர். இதன் பிறகே சாதிக் பாட்சா மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் அண்மையில் சாதிக் பாட்சாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி ரேகா பானு வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரம் ஒரு தரப்பை கோபப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் ரேகா பானுவின் கார் தாக்கப்பட்டது. இது தொடர்பாக அன்றைய தினமே காவல் நிலையத்தில் ரேகா பானு தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தாக்குதல் நடத்தியது யார் என்று தெரியவில்லை என கூறிவிட்டு ரேகா பானு சென்றுவிட்டார். 

இந்த நிலையில் திடீர் பரபரப்பாக டெல்லி சென்ற ரேகா பானு அங்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் சந்தித்து தனது கணவர் சாதிக் பாட்சா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது மரணத்திற்கு திமுகவில் உள்ள சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறி பகீர் புகார் அளித்து அதிர வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் ரேகா பானு தன்னுடைய வாகனத்தை தாக்கியவர்கள் திமுகவினர்தான் என்றும் அவர்களால் தான் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பேட்டி அளித்து திமுக தரப்பிற்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார். 

கடந்த முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது திமுக என்கிற வார்த்தையையே உபயோகப்படுத்தாத ரேகா பானு தற்போது டெல்லியில் திமுகவினருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று வெளிப்படையாகக் கூறி அதன் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரின் கைங்கரியம் இருப்பதாக திமுகவினரே கூறுகின்றனர். அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு மேல் உள்ள ஒரு நபர் நேரடியாக கொடுத்த வாக்குறுதியை நம்பி ரேகா பானு குடியரசுத் தலைவரை சந்தித்ததாகவும் சொல்கிறார்கள்.
 

click me!