தேர்தலில் வெற்றிபெற திமுக-அதிமுகவினர் வீடுகளில் யாகம், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அரசியல், இந்து முன்னணி பகீர்

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2020, 11:04 AM IST
Highlights

அந்த சிவன் கோயிலை தூய்மை படுத்தி கும்பாபிஷேகம் நடத்தவும், வருகின்ற 28ந் தேதி கார்த்திகை திருநாளை முன்னிட்டு  திருப்பரம்குன்றம் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றவும் தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது

சிறுபான்மையினர் ஓட்டுக்காக திருப்பரம்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது என இந்து முன்னனி கட்சியின் மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மதுரை திருப்பரம்குன்றம் கோவில்  முன்பாக கார்த்திகை தீபம் ஏற்ற  அனுமதி வழங்க கோரி இந்து முன்னனி கட்சியின் மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி, மாவட்ட செயலாளர் செல்வகுமார், மண்டல தலைவர் ராஜசேகர், மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஷ்வரா சுப்பிரமணியம், 

திருப்பரம்குன்றம் கோவில் மலையில் உள்ள சிவனை வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது.அந்த சிவன் கோயிலை தூய்மை படுத்தி கும்பாபிஷேகம் நடத்தவும், வருகின்ற 28ந் தேதி கார்த்திகை திருநாளை முன்னிட்டு  திருப்பரம்குன்றம் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றவும் தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது, கோவில் மலையில் சில தவறான காரியங்கள் நடப்பதாக இப்பகுதி மக்கள் கூறிகின்றனர், அதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது, காரணம் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற அரசு இவ்வாறு செயல்படுகிறது, 

ஆட்சியில் உள்ளவர்களும் , எதிர் கட்சியில் உள்ளவர்கள் நாத்திகவாதிகளாக இருந்தாலும்  தேர்தலில் வெற்றிப் பெற வீடுகளில் யாகங்களை வளர்க்கிறார்கள், இருந்தும் இந்துகளின் வழிபாட்டு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், இந்துக்களின் கால காலமாக வழிபட்டு வரும் ஆன்மிக வழிபாடன கார்த்திகை தீபம் திருப்பரம்குன்றம் மலையில் ஏற்ற எங்களுக்கு நீதி மன்றம் அனுமதியும் வழங்கி உள்ளது, நீதிமன்றம் அனுமதியையும் மதிக்காமல் கார்த்திகை தீபம் ஏற்ற எங்களுக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை என்றால் , 28ந் தேதி திருப்பரம்குன்றம் கோவில் முன்பு மாபெரும் போராட்டம் நடைப்பெறும் இவ்வாறு கூறினார்.
 

click me!