
எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் குறித்த சி.டி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவிட்டு அனுப்பிய கடிதத்தை பேரவையில் படித்து காட்ட முடியாது என மறுத்ததால் சபாநாயகர் மற்றும் ஸ்டாலினிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சரவணன் வீடியோ விவகாரம் சம்பந்தமாக கவர்னர் உத்தரவு கடிதத்தை பேரவையில் படித்து காட்ட வேண்டும் என முக ஸ்டாலின் வைத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்று கொள்ள வில்லை.
ஆளுநர் அனுப்பிய கடித்தத்தை பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அப்போது பதிலளித்த சாபாநாயகர் உங்களுடைய விருப்பத்திற்கு எல்லாம் அவையில் விளக்கம் அளிக்க என்னால் முடியாது.
அவையில் விளக்கம் அளிக்க அறிவுறுத்தல் இல்லை. தக்க நடவடிக்கை எடுக்க மட்டுமே எனக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த பின்னர் அதை கவர்னருக்கு தெரியபடுத்துவேன் . இதை குறித்து அவையில் விவாதிக்கவோ விளக்கவோ அவசியம் இல்லை என்று கோவமாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உங்களை விவாதிக்க நாங்கள் கூறவில்லை என்றும், அது மரபு அல்ல என்பது எங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். ஆனால் அவை உறுப்பினர்களுக்கு நீங்கள் விளக்க வேண்டும் என்று கூறினார்.
சபாநாயகர் அதை ஏற்றுக்கொள்ளாததால் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்.