கெட்டுப்போன பால் பாக்கெட் குறித்து முதல்வரிடம் புகார்.. 3 மணி நேரத்தில் அதிரடி.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

By vinoth kumarFirst Published Apr 28, 2020, 10:24 AM IST
Highlights

நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர், நேற்று தான் வாங்கி வந்த ஆவின் பால் பாக்கெட்டுகளில் சில பால் பாக்கெட் கெட்டு போனதாக தமிழக முதல்வர் எடப்பாடியிடம் டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்திருந்தார். 

நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர், நேற்று தான் வாங்கி வந்த ஆவின் பால் பாக்கெட்டுகளில் சில பால் பாக்கெட் கெட்டு போனதாக தமிழக முதல்வர் எடப்பாடியிடம் டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, புகார் தெரிவித்த  3 மணி நேரத்துக்குள் நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பொது முடக்க காலத்தில், பொது மக்களின் குறைகளை டுவிட்டர் மூலமாக அரசியல் தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பதிவில்  சில சமயங்களில் நேரடியாக பொது மக்களுக்கு நேரடியாக பதிலளித்து வருகிறார். அவரின் இந்த செயல்பாடு குறிப்பாக பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையி்ல், எஸ்.வி.சேகர் முதல்வருக்கு ட்வீட் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று எஸ்.வி.சேகர், “காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்துவிட்டது. வீட்டில் 90 வயது தாயார், 7 வயது, 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது,” என்று தமிழக முதல்வர்கள் அலுவலத்தையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் ட்விட்டர் மூலம் டேக் செய்திருந்தார். முதலில், இந்த பதிவை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். சிலர், முதல்வர் வரை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று பதிலளித்து வந்தனர். இதனையடுத்து, புகார் தெரிவித்த  3 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நன்றி தெரித்துள்ளார். 

pic.twitter.com/grXdMXzt33

— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER)

 

இதற்கிடைகியே, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது  எஸ்.வி.சேகர் டுவிட்டர் பக்கத்தில்;-  “நான் தங்களுக்குப் பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய டபுள் டோண்டு பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக் கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்,” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். ஆனால், எஸ்.வி.சேகரின் இந்த இரண்டு பதிவுக்கு, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மக்களே இனி பால் வீனா போனா EPS க்கும் ops க்கும் லெட்டர் இல்ல மெயில் அனுப்பவும்

— திருஞானம்⏳ (@ramamort)

 

இன்னைக்கு மட்டும் பால் திரியட்டும்.

ஸ்ட்ரெயிட்டா பிரதமர்தான் pic.twitter.com/LTCAUWjhsi

— ♥️Fanz🌹🌹🌹 (@Rajaram1643)

 

அடு்த்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டபட்டுட்டு இருக்கும் போது உங்களுக்கு பால் கிடைச்சுது ட்வீட்
போடுறீங்க. உங்களை போல முட்டாளுக்கு குடை பிடிப்பவர்களை சொல்ல வேண்டும்

— suresh (@sureshnithin)

 

இதெல்லாம் சாபக்கேடு நாட்டில் சாப்பாடு இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள் உங்களுக்கு பால் பாக்கெட் பிரச்சினை

— Athi.Anbuselvan (@AthiAnbuselvan)

click me!