கூலிக்கு மாரடிக்கலாமா திருமாவளவன்? எவனோ காசு கொடுக்கிறான்னு இப்படி பேசலாமா!: ’ஆபாச சிலை’ காட்டு தீயை அணையவிடாமல், காட்டுத்தனமாக தாக்கும் எஸ்.வி.சேகர்.

By Arun VJFirst Published Nov 28, 2019, 7:12 PM IST
Highlights

இந்து மதம், இந்துக்கள், பா.ஜ.க. ஆகிய கான்செப்ட்களின் மீது யாராவது கல்லை எறிந்தால், இந்த மனுஷன் கண்ணை கலக்கிடுறார். 

சினிமாவில் ஹீரோ ரோல் செய்தவர்கள் அரசியலில் காமெடியன்களாக வாய்ப்புள்ளது! என்பதற்கு பக்கா உதாரணம் நடிகரும், நாடாளும் மக்கள் கட்சி தலைவருமான கார்த்திக்.

அதேநேரத்தில்! சினிமாவில் காமெடித்தனம் செய்தவர்கள், அரசியலில் வில்லனிக் ஹீரோவாகலாம் என்பதற்கு செம்ம உதாரணம் நம்ம எஸ்.வி.சேகர். மனுஷன் கடந்த சில வருடங்களாக வாயைத் திறந்தாலே அரசியல் அமில மழை பொழிகிறது. அ.தி.மு.க. பக்கமெல்லாம் போய்விட்டு இப்போது கடந்த சில காலமாக பா.ஜ.க.வில் செட்டிலாகி இருக்கிறார் மனிதர். 

இந்து மதம், இந்துக்கள், பா.ஜ.க. ஆகிய கான்செப்ட்களின் மீது யாராவது கல்லை எறிந்தால், இந்த மனுஷன் கண்ணை கலக்கிடுறார். அவ்வளவு வெறித்தனமான வார்த்தைகளில் போட்டுத் தாக்கு தாக்கென தாக்குகிறார். 
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளை ச்சும்மாவே விட்டு விளாசும் எஸ்.வி.சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்து ஆலயங்களைப் பற்றி ’அப்படி’ பேசியபிறகு  பேசாமலா இருப்பார்? பிரிச்சு மேய்ஞ்சிடமாட்டாரா என்ன....செஞ்சுட்டாரே!எப்படி? இப்படி.............

”ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்குமா? அட ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்குமா சார்! இந்து மதத்தை பற்றி கீழ்த்தரமாக பேசுகிறார் திருமாவளவன். அதற்கு அடுத்த நாளே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகிறார். அந்தம்மா முதல்வராக இருந்தால் இப்படி நடக்குமா?!

மதச்சார்பின்மை!ன்னு சொல்றாங்களே, இந்து மதத்தை கேவலமாக பேசுவதுதான் மதச்சார்பின்மையா? எவனோ காசு கொடுக்கின்றான் என்பதற்காக திருமாவளவன் கூலிக்கு மாரடிப்பது எல்லாம் சரியாக வராது. பொதுவெளியில் நடிகைகளைப் பற்றி திருமாவளவன் அசிங்கமாக பேசியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சி கூட இதை கண்டிக்கவில்லை. சிதம்பரத்தில் அனைத்து தீட்சிதர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி எம்.பி.யான திருமாவளவன், இப்போது இப்படியெல்லாம் பேசுவது ஏற்புடையதே அல்ல.” என்று விளாசியிருக்கிறார். காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்கிற காரணத்துக்காக, அவர் கண்ணியக்குறைவாக பேசப்பட்டதை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்காதது தவறுதானோ?!
 

click me!