விவசாயிகள் கடனுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பிரதமர் மோடி உறுதி

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 08:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
விவசாயிகள் கடனுக்கு ரூ.20 ஆயிரம் கோடி  பிரதமர் மோடி உறுதி

சுருக்கம்

விவசாயிகளின் நலனை மேம்படுத்த அவர்களுக்கு கடன் அளிக்கவும், கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை  தடை செய்த அறிவித்தபின், ஏறக்குறைய 50 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் விவசாயிகளுக்கான  திட்டம்  குறித்துக் கூறுகையில், “ நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனுக்கான இந்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், கடன் வழங்கவும், கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கடன் அனைத்தும் கூட்டுறவு வங்கிகள் மூலம் அளிக்கப்படும். 


விவாசாயிகளிடம் உள்ள கிசான் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் ரூபே கார்டுகளாக மாற்றப்படும். அடுத்த 3 மாதங்களில் 3 கோடி  கிசான் கிரெடிட் கார்டுகள், ரூபே கார்டுகளாக மாற்றப்படும். 3 மாதத்தில் 3  கோடிகீசான் கிரிடெட் கார்டுகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும்.

இந்த ஆண்டு ராபி பருவத்தில் கூடுதலாக 6 சதவீதம் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர், வழக்கத்தைக்காட்டிலும் 9 சதவீதம் உரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!