தீபாவளிக்கு குடும்பத்திற்கு ரூ 2000... விரைவில் எடப்பாடி பழனிசாமியின் ஜாக்பாட் அறிவிப்பு..!

Published : Oct 27, 2020, 01:50 PM IST
தீபாவளிக்கு குடும்பத்திற்கு ரூ 2000... விரைவில் எடப்பாடி பழனிசாமியின் ஜாக்பாட் அறிவிப்பு..!

சுருக்கம்

 கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க இருப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

2019ம் ஆண்டு ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 உதவித் தொகை திட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அடுத்து பொங்கல் பண்டிகைக்கும், தீபாவளிக்கும் ரூ 1000 ரூபாயை ஏழைகளுக்கு அறிவித்தார். இந்த முறை சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் ஏதேனும் அறிவிப்பு வரலாம் எனக் காத்திருக்கிறார்கள் மக்கள். 

அந்த எதிர்பார்ப்பை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க இருப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே மக்களுக்கான மேலும் பல நலத்திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு திட்டங்களை வகுத்துள்ளதாக கூறுகிறார்கள் தலைமை செயலக வட்டாரத்தினர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலினை கதறவிடும் கூட்டணி கட்சிகள்.. மைனாரிட்டி ஆட்சி..? திமுகவுக்கு இரண்டே ஆப்ஷன்..!
மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.. பிரதமரை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. இபிஎஸ் மீதும் சரமாரி அட்டாக்!