இரட்டை இலையை காட்டி..பணம் பறித்த அதிமுக பிரமுகர்...சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு

By Raghupati R  |  First Published Dec 31, 2021, 1:57 PM IST

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து, தலைமறைவான அதிமுக பிரமுகர்கள் குறித்து மாநகரில் போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


ஈரோடு மாவட்டத்தின் பிரதான காய்கறி சந்தையாக ஈரோடு நேதாஜி மார்க்கெட் வ உ சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி கிருஷ்ணகிரி ஓசூர் தர்மபுரி ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளிலிருந்து காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வருகின்றனர்.இந்த மார்க்கெட்டில் மொத்தமாகவும் மற்றும் சில்லரை வணிகம் செய்யும் 800 கடைகள் செயல் பட்டு வருகிறது. 

Latest Videos

undefined

கடந்த அதிமுக ஆட்சியில் நேதாஜி தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் மார்க்கெட் வியாபாரிகள் இடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்துள்ளனர். மேலும்,  50000 காலி மனைக்கும் பதிவு செய்ய சங்க உறுப்பினர்களிடம் 20ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

பின்னர் பணம் வசூல் செய்யப்பட்டு ஆண்டுக்காணக்காக முடிந்த நிலையில் வீட்டுமனை பதிவு செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. மேலும் இந்த வீட்டுமனை சம்பந்தமாக வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னாள் சங்க தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் ஆண்டுகள் பல கடந்த நிலையில் வியாபாரிகளுக்கு உரிய வீட்டு மனை வழங்காததால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர். 

அந்த புகாரின் பெயரில் நடவடிக்கை எடுத்த ஈரோடு மாவட்ட காவல் துறையினர் அதிமுக வார்டு பிரதிநிதி வைரவேல் என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த புகாரில் தொடர்புடையை சங்கத்தை சேர்ந்தவர்கள் பத்து நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அதிமுகவின் பகுதி செயலாளர் முருக சேகர் மற்றும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை படத்தை அச்சிட்டு மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டராக அச்சடித்து ஒட்டி உள்ளனர். 

மேலும் அதில் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர்கள் 10 பேர் தலைமைறைவாக உள்ளதாக குறிப்பிட்டும், அதிமுக பகுதி செயலாளர் முருகசேகர் படத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் குறிப்பிட்டும் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டர்களால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ‘அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பொறித்த போஸ்டர்கள் ஒட்டியதால் அதிமுக கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளது. 

எனவே போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயலுக்கு பின்னல் திமுகவினர் இருக்க வாய்ப்பு இருக்கிறது’ என முன்னாள் பொதுப்பணித்ததுறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளர் கேவி ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

click me!