அஜித் அளித்த ரூ.25 லட்சம் நிவாரண நிதி... ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர்..!

Published : May 14, 2021, 10:40 AM ISTUpdated : May 14, 2021, 11:28 AM IST
அஜித் அளித்த ரூ.25 லட்சம் நிவாரண நிதி... ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர்..!

சுருக்கம்

நடிகர் அஜித் சுமார் ரூ.25 லட்சத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளித்தார் நடிகர் அஜித்

நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தொற்றுக்கான மருந்து கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனை சமாளிக்கவும், இந்தியாவுக்கு உதவவும் பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இதேபோன்ற பாதிப்பும் தமிழகத்திலும் நிலவி வருகிறது.

 
 
இந்தநிலையில் இந்த இக்கட்டான நிலையை சமாளிக்கவும், கொரானா நிவாரண நிதியாகவும், மக்களால் தங்களால் இயன்றதை தாராளமாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று பல தொண்டு நிறுவனங்கள் பல கோடிகளை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள குழந்தைகளும் தங்களால் ஆன சேமிப்பு தொகைகள் முதல்வருக்கு அனுப்பி வைத்து பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நடிகர் அஜித் சுமார் ரூ.25  லட்சம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணப்பரிமாற்றம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TN Politics: முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்; ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி வெடித்த சர்ச்சை! உண்மை என்ன?
TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி