கிறிஸ்தவ மதம் மாற்ற ஆண்டுக்கு ரூ.1000 கோடி... ஆதாரம் காட்டி தி.மு.க- தி.க.,வுக்கு மாரிதாஸ் அதிர்ச்சி..!

Published : Aug 27, 2019, 05:10 PM IST
கிறிஸ்தவ மதம் மாற்ற ஆண்டுக்கு ரூ.1000 கோடி... ஆதாரம் காட்டி தி.மு.க- தி.க.,வுக்கு மாரிதாஸ் அதிர்ச்சி..!

சுருக்கம்

கிறிஸ்தவ மதம் மாற்ற சென்னைக்கு மட்டும் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வருவதாக மாரிதாஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.   

கிறிஸ்தவ மதம் மாற்ற சென்னைக்கு மட்டும் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வருவதாக மாரிதாஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறையையும் கட்சித் தலைவர் ஸ்டாலினையும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் மாரிதாஸ் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவை தடை செய்ய வேண்டும் என்றும், 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் திமுகவின் நிலைப்பாடு ஹிஸ்புதின், லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாரிதாஸ் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதற்காக மாரிதாஸ் மீது  திமுக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். அவருக்கு எதிராக திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மாரிதாஸ் திமுக குறித்து வெளியிட்டுள்ள வீடியோக்கள் அனைத்தும் பொய்யானவை என கூறி வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள மாரிதாஸ், ‘’சென்னைக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ மதம் மாற்றும் இயக்கங்களுக்கு வருகிறது. 

அதுவும் பக்கா திட்டமிடலுடன் தெளிவாக வழிமுறைகள் செய்யப்பட்டு வருகிறது என்று நான் சொன்னது பொய் என்று திமுக -திக பரப்பினர். அதற்கான ஆதாரம் FRCA தகவல்கள் இதோ’’ என சில பட்டியல்களையும் மாரிதாஸ் வெளியிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் பெண்மணி.. யார் இந்த சுனேத்ரா பவார்..?