மேற்கு வங்கத்தில் குடும்பத்துக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை... ஸ்டாலின் அறிவிப்பை கையில் எடுத்த மம்தா பானர்ஜி.!

By Asianet TamilFirst Published Mar 17, 2021, 9:47 PM IST
Highlights

மாநிலத்தில் உள்ள 1.6 கோடி குடும்பத்துக்கும் குறைந்தபட்ச வருமானமாக மாதம் ரூ. 500 மற்றும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பாஜக துடித்துக்கொண்டிருக்கிறது. இதேபோல ஆட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸும் படபடக்கிறது. இந்நிலையில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் வாக்குறுதிகளை அள்ளிவீசியிருக்கிறார்.
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை என்ற அறிவிப்பை போல மம்தா பானர்ஜியும் தேர்தல் வாக்குறுதிகளில் அளித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 1.6 கோடி குடும்பத்துக்கும் குறைந்தபட்ச வருமானமாக மாதம் 500 (பொதுப்பிரிவினர்) மற்றும் 1000 (எஸ்சி/எஸ்டி/ஓபிசி) ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 
மேலும் மேற்குவஙக மாநிலத்தில் புதிதாக 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; ஏழைகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்; மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியில் 10 லட்ச ரூபாய்க்கான கடன் அட்டை வழங்கப்படும்; கர்ப்பிணி பெண்களுக்கு 2 ஆண்டுகள் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்; சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்; ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கப்படும்; 2500 ‘மா’ கேண்டீன்கள் மூலமாக 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 

click me!