நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. வரும் 23ம் தேதியில் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் மட்டுமே வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எதிர்பார்த்ததைப் போலவே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. வரும் 23ம் தேதியில் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் மட்டுமே வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.1000 நோட்டை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- 2000 ரூபாய் நோட்டு: திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி; மாற்றுவதற்கு காலக்கெடு; மக்கள் அதிர்ச்சி!!
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எதிர்பார்த்தது போலவே ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று அவற்றை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ.2000 நோட்டுகள் பரிமாற்றத்திற்கான சரியான தொகையல்ல. இதை 2016ம் ஆண்டு நவம்பரிலேயே நாங்கள் சாரியாக கணித்துவிட்டோம். ரூ.500, ரூ.1000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க;- புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்... என்ன செய்வது? இதோ முழு விவரம்!!
பணமதிப்பிழப்புக்கு பிறகு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் புதிய ரூ.500 நோட்டை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரூ.1000 நோட்டை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். பணமதிப்பு நீக்கம் அதன் சுழற்சியை முடித்து அதே இடத்திற்கு வந்துவிட்டது. ரூ.2000 நோட்டு ஒரு போதும் சுத்தமான நோட்டாக இருந்ததில்லை. இது பெருபான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. அது கருப்புப்பணத்தை தற்காலிகமாக வைத்திருப்பவர்களாலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.