பொங்கலுக்கு நையா பைசா கூட கொடுக்காமல் 1000 கோடியை ஆட்டையை போட்ட திமுக.. எச்.ராஜா தாறுமாறு விமர்சனம்..!

By vinoth kumarFirst Published Jan 22, 2022, 11:25 AM IST
Highlights

பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகின்றன. விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை, புளியில் பல்லி, பரிசு பணம் எங்கே என்று பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் 1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திமுக மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகின்றன. விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை, புளியில் பல்லி, பரிசு பணம் எங்கே என்று பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்  எச்.ராஜா கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா;- கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கிய போது, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை செய்திருப்பதாக கூறினார். ஒரு நையா பைசா காசு எதுவும் கொடுக்கவில்லை.

ஆனால் அந்த பொங்கல் தொகுப்பும் எப்படி வழங்கப்பட்டு இருக்கிறது?  என்றால் மிளகுக்குப் பதிலாக இலவம்பஞ்சு கொட்டையும், மிளகாய் தூளுக்கு பதிலாக மரத்தூளும் அதில் பல்லி, பாச்சான், சிரஞ்சி இந்த மாதிரியா முழுக்க முழுக்க  கலப்படமான பொருட்களை பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடுத்து இருக்கின்ற ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம்  இருக்கிறது.

தமிழக அரசு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கிறது. இவ்வகையான பொருள்களில் கலப்படம் செய்வது உயிருக்கு ஆபத்து இல்லையா? தமிழ்நாட்டுக்கும் விரோதிகள், தமிழுக்கும் எதிரிகள்  இந்த திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தான். ஏனென்றால் ஈவேரா பற்றி அனைவருக்கும் ஏற்கனவே  தெரியும். தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிய காட்டுமிராண்டிக் கூட்டம் அவர்கள் என எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!