ரௌடி பினுவின் கூட்டாளி முகேஷ் கைது… பட்டுக்கோட்டையில் வேட்டையாடிய போலீசார் !!

Asianet News Tamil  
Published : Feb 10, 2018, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
ரௌடி பினுவின் கூட்டாளி முகேஷ் கைது… பட்டுக்கோட்டையில் வேட்டையாடிய போலீசார் !!

சுருக்கம்

Rowdy Mugesh arrest in pattukkottai

சென்னையில்  விறந்த நாள் பார்ட்டியில் இருந்து தப்பிய ரௌடி  பினுவின் கூட்டாளி முகேஷ் பட்டுக்கோட்டையில் போலீசாரால் சுற்றுவளைத்து கைது செய்யப்பட்டார். 

சென்னையில் பிரபல ரவுடி பினு சினிமா பாணியில் ஆட்டுக்கறி, மது விருந்துகளுடன் சக ரவுடிகளை அழைத்து  பிறந்த நாள் கொண்டாடியபோது கடந்த 7ம் தேதி,  போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து 75 ரவுடிகளை  ஒரே நேரத்ததில் கைது செய்தனர்.

இதில் விழா கொண்டாடிய ரௌடி  பினு,   சென்னை சூளமேட்டை சேர்ந்த முகேஷ் உள்பட 50 பேர்  பார்ட்டியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். . இதில் ரௌடி முகேஷ் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இது குறித்து  தஞ்சை போலீசாருக்கு  சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  போலீசார் பட்டுக்கோட்டை சென்று சுண்ணாம்புகாரத்தெருவில் பதுங்கி இருந்த ரௌடி  முகேஷை  சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் சென்னை சட்டகல்லூரியில் பிஎல் படித்து கொண்டிருக்கும்  தமிழ்ச்செல்வன்என்பவரது வீடு பட்டுக்கோட்டையில் உள்ளது.  தமிழ்செல்வன் முகேஷுக்கு நண்பர் என்பதும் இதனால் இங்கு வந்து பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது.

மேலும் தமிழ்ச்செல்வனின் தம்பி விஜய் ஐடி மாணவர். இவரையும் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். சென்னையில் தமிழ்ச்செல்வன், முகேஷின்  தந்தை சங்கர் ஆகியோர்  ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டையில் முகேஷ் கைது சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

கொளத்தூரை சேர்ந்த ரௌடி  முகேஷ் மீது செம்மரக்கட்டை கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ரௌடி  பினுவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!