திமுகவுக்கு பிரச்சாரம் செய்து வம்பில் சிக்கிய ருமேனியா நாட்டு தொழிலதிபர்.. நாட்டை விட்டு அனுப்பப்படுகிறாரா.?

Published : Feb 18, 2022, 01:54 PM IST
திமுகவுக்கு பிரச்சாரம் செய்து வம்பில் சிக்கிய ருமேனியா நாட்டு தொழிலதிபர்.. நாட்டை விட்டு அனுப்பப்படுகிறாரா.?

சுருக்கம்

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் விசாவில் வந்து அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வது விசா விதிமுறை மீறல் எனவும் இது தொடர்பாக உடனடியாக சென்னையில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குடியுரிமை துறை அதிகாரிகள் கோவையிலுள்ள நிகொய்டாவிற்க்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினார்கள்  

திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட ருமேனியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகொய்டா ஸ்டெஃபன் மாரியஸ் அவருடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியுரிமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குடியுரிமை துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இந்த கேள்வி எழுந்துள்ளது. 

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட ரூமெனியா நாட்டைச் சேர்ந்த நிகொய்டா ஸ்டெஃபன் மாரியஸ்க்கு குடியுரிமை அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். நிகொய்டா தொழில் நிமித்தமாக கோயம்புத்தூர் வந்திருக்கிறார், திமுக கட்சியின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி பேருந்து நிலையம் மக்கள் கூடும் இடம் என எல்லா இடத்திலும் துண்டுப் பிரசுரம் வினியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் விசாவில் வந்து அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வது விசா விதிமுறை மீறல் எனவும் இது தொடர்பாக உடனடியாக சென்னையில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குடியுரிமை துறை அதிகாரிகள் கோவையிலுள்ள நிகொய்டாவிற்க்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

குடியுரிமை துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸின் அடிப்படையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். பொதுவாக இந்திய நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டவர்கள் மதரீதியான பிரச்சாரம் மற்றும் அரசியல் ரீதியான பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்ற விதிமுறையின் அடிப்படையில்தான் விசா வழங்கப்படுகிறது. 

தற்போது இந்த விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் விசா விதிமுறை மீறல் நடந்துள்ளது என விசாரணை அதிகாரிக்கு தெரியவந்தால் உடனடியாக அவருடைய நாட்டிற்கு அவர் திருப்பி அனுப்பப்படுவார் அதுமட்டுமல்லாமல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!