தீபாவுக்கு ஓ.பி.எஸ். அணி கல்தா? - ஆர்.கே.நகர் வேட்பாளராகிறார் மதுசூதனன்?

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
தீபாவுக்கு ஓ.பி.எஸ். அணி கல்தா?  - ஆர்.கே.நகர் வேட்பாளராகிறார் மதுசூதனன்?

சுருக்கம்

rkenakar ops to choose a candidate in the election.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது….

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேர்தல் ஜூரம் சென்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தகிக்கத் தொடங்கியிருக்கு…. சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சார்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் அவ்வப்போது அள்ளித்தரும் ஓ.பி.எஸ். அணி தீபாவுக்கு ஆதரவு அளிக்குமா? அல்லது தேர்தலைச் சந்திக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இதுவரை கருதப்பட்டது.

இதற்கிடையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சிமன்றக் குழுத் தலைவர் மதுசூனன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

அப்போது வேட்பாளராக மதுசூதனனை வேட்பாளராக முன்னிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்…ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தால் அதனை ஏற்கத் தயார் என்று தீபா வெளிப்படையாகவே தெரிவித்துள்ள நிலையில், மதுசூதனனை தேர்வு செய்ய ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Wins Floor Test: 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் ஜோசப் விஜய்
Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!