20 ரூபாய் டோக்கனுக்கு பணம் பட்டுவாடா... ஆர்.கே.நகரில் நாளை டி.வி.வி. தினகரன் அதிரடி?

By manimegalai aFirst Published Dec 25, 2018, 6:59 PM IST
Highlights

செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்ற பிறகு  தள்ளாடித் தவிக்கிறது அமமுக. இந்த நிலையில், டி.டி.வி.தினகரன்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கு நெம்புகோலாக இருந்த 20 ரூபாய் டோக்கன் திட்டத்தை மீண்டும் தூசி தட்டி வருவதாக தடதடக்கிறார்கள் அமமுகவினர்.  

செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்ற பிறகு  தள்ளாடித் தவிக்கிறது அமமுக. இந்த நிலையில், டி.டி.வி.தினகரன்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கு நெம்புகோலாக இருந்த 20 ரூபாய் டோக்கன் திட்டத்தை மீண்டும் தூசி தட்டி வருவதாக தடதடக்கிறார்கள் அமமுகவினர்.  

ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் பணத்தை டோக்கனாக கொடுத்துவிட்டு ஒவ்வொரு 20 ரூபாய்க்கும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்படும் என டி.டி.வி. தினகரன் வாக்குறுதி அளித்தன் அடிப்படையிலேயே வெற்றி பெற்றதாக பரவலான பேச்சுண்டு. அப்போது முதலவர் அவரை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் டோக்கன் செல்வர் என அழைத்து வருகின்றனர். அதே நேரத்தில், அவர் வெற்றி பெற்ற பிறகு டோக்கனாக கொடுத்த 20 ரூபாய்க்கு பணம் எதையும் கொடுக்கவில்லை. டோக்கனை கொடுத்து ஏமாற்றி விட்டதாக அதிமுகவினர் கிண்டலடித்து வந்தனர்.  

இந்த நிலையில் சுனாமி நினைவு தினத்தை கடைபிடிக்க நாளை ஆர்.கே.நகர் பகுதிக்கு செல இருக்கிறார் டி.டி.வி. தினகரன். அவர் காசிமேடு பகுதிக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அந்தப் பகுதியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் வீடு வீடாக சென்று டோக்கனாக 20 ரூபாய் யார்? யார்? என கணக்கு எடுத்து வருகிறார்கள்.  

இதனால், 20 ரூபாய் டோக்கனுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரப்படும் என செய்தி ஆர்.கே.நகர் முழுவதும் அலையடித்து வருகிறது. ஆனால், நாளை காசிமேடு பகுதிக்கு தினகரன் வரும்போது டோக்கனாக கொடுத்த 20 ரூபாயை காட்டி எதிர்ப்பு தெரிவித்துக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு ஒரு கணக்கெடுப்பை அமமுக நிர்வாகிகள் நடத்தியுள்ளனர் எனவும் கூறுகிறனர். மற்றொரு தரப்போ, அவர் பக்கம் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கவே பணத்தை எடுக்க மறுத்து வரும் தினகரன் இபோது டோக்கனுகா காசு கொடுக்கப்போகிறார்? என நம்ப மறுக்கிறது.

கணக்கெடுப்பு நடத்திய நிர்வாகிகள் திடீரென்று தலைமை கணக்கெடுக்க சொன்னது, அதனால், கணக்கெடுத்து கொடுத்துள்ளோம் எனக் கூறுகிறார்கள். நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் என்ன நடகப்போகிறதோ... தினகரனுக்கே வெளிச்சம்!

click me!