நீட் தேர்வால் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளது... முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Sep 15, 2022, 9:29 PM IST
Highlights

ஜிஎஸ்டியால் மாநில நிதி உரிமையும், நீட் தேர்வால் கல்வி உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஜிஎஸ்டியால் மாநில நிதி உரிமையும், நீட் தேர்வால் கல்வி உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில், பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான தினம், தந்தை பெரியார் பிறந்த தினம் என திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு சிறைப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா. தமிழ்நாடு என்ற பெயரை கூறிய போது சட்டப்பேரவை உற்சாகத்தில் மிதந்தது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது ஆரிய மாடல், எல்லாருக்கும் எல்லாம், அனைவரும் சமம் இது தான் திராவிட மாடல்.

இதையும் படிங்க: நாட்டிலேயே தலை சிறந்த மருத்துவர்களுக்கு இந்த கதியா.?? ஸ்டாலின் அரசை எண்ணி தலையில் அடித்துக் கொள்ளும் சீமான்.

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் சேர்க்கையே திராவிட மாடல். அனைத்திலும் தமிழர்களை முன்னேற்ற வேண்டும் என்ற பொறுப்பை என் தோள்களில் சுமக்கிறேன். நீதி கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்டது தான் மதிய உணவு திட்டம். மதிய உணவு திட்டத்தை விரிவுப்படுத்தியவர் காமராஜர். தமிழ்நாட்டை எல்லா வளமும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது நாம் தான் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி கிடைப்பதற்காக விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும்.

இதையும் படிங்க: அடுத்தவர் சாதனையில் அட்ரஸ் ஒட்டும் திமுக.. திராவிட மாடல் ஆட்சியை டார் டாரா கிழித்த அண்ணாமலை.

இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட, தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகம். கல்வி, கல்லூரி, மருத்துவம் என அனைத்திலும் தமிழகம் முன்னோடி. பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறார்கள். ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது. ஜிஎஸ்டியால் மாநில நிதி உரிமையும், நீட் தேர்வால் கல்வி உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. வலுவான மாநிலங்கள் தான் கூட்டாட்சியின் அடிப்படை. நாட்டின் அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு அடைய வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!