
ஜெயலலிதாவிடம் பேசினீர்களா என்று ரிச்சர்ட் பேலிடம் கேட்டபோது ஆமாம் அவரிடம் சில நேரம் பேசினேன், நான் சொன்னதை அவர் புரிந்து கொண்டார்.
சன்னமான குரலில் பேசினார். என்னைப்பற்றி , என் குடும்பத்தை பற்றி கேட்டார் என் மனைவி குழந்தைகள் பற்றி ஜெயலலிதா விசாரித்தார்.
சில நேரம் அவரால் தெளிவாக பேச முடியாததால் அவர் சைகை மூலம் பதிலளிப்பார். அதை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. அதே போல் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவருக்கு கூறினோம்.
அவரை யார் பார்க்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார். யார் வந்திருக்கிறார் என்பதை அவருக்கு எழுதி காட்டுவோம். நன்றாக புரிந்து கொண்டார். இவ்வாறு டாக்டர் பேல் கூறினார்.