
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது உண்மைதான் என பகீர் ஒப்புதல் உண்மைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று அவருக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, ஜெ. விடம் கை ரேகை வாங்கிய மருத்துவர் பாலாஜி, மருத்துவர் பாபு, பட்டிமன்ற பேச்சாளரும் எம்ஜிஆர் பல்கலைகழக பதிவாளருமான மருத்துவர் சுதா சேஷையன், ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்து பேசிய சுதா சேஷையன் 'எம்பால்மிங்' எனப்படும் உடல் பதப்படுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது உண்மைதான் என ஒத்துக்கொண்டார்.
இது மிக முக்கியமான விவிஐபிக்களுக்கு செய்யப்படும் சிகிச்சைதான்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு டிச.5ஆம் தேதி இரவு 12.20க்கு எம்பால்மிங் செய்யப்பட்டது.
அதை செய்வதற்காக 5 லிட்டர் திரவம் ஜெயலலிதாவின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. குறிப்பாக விஐபிக்கள் மறைவின் பொது அவர்களது உடல் கெட்டு விடாமல் இருப்பதற்கும் முகம் பொலிவோடு காட்சியளிக்கவும் இது போன்ற எம்பல்மிங் செய்யபடுவது வழக்கமான ஒன்று என தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு கை கால்கள் எதுவும் வெட்டப்படவில்லை எனவும் உறுப்பு மற்ற சிகிச்சை எதுவும் செய்யபடவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக பேசிய ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவிடம் தான் பேசியதாகவும் அவர் தன் குடும்பத்தை பற்றி விசாரித்ததாகவும் தெரிவித்தார்.