பிரபல சூப்பர் ஸ்டாரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய வீரருக்கு வெகுமதி..!

By Thiraviaraj RMFirst Published Aug 25, 2021, 5:49 PM IST
Highlights

இதனை மறுத்துள்ள சி.ஐ.எஸ்.எப்., டுவிட்டர் பதிவில், '' சி.ஐ.எஸ்.எப்., அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. 

மும்பை விமான நிலைய முனையத்திற்குள் நுழைய முயன்றபோது பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பாலிவுட் நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்திய மத்தியப்படை போலீஸ் வீரருக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன், கத்ரீனா கைப் நடிக்கும் 'டைகர் 3' படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக  மும்பை விமான நிலையம் வந்த சல்மான் கான், விமான நிலைய முனையத்திற்குள் செல்ல முயன்றார். ஆனால், அங்கு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து நிறுத்தினார். பாதுகாப்பு சோதனைகளை நிறைவு செய்து ஒப்புதல் பெறும்படி அறிவுறுத்தினார்.இந்நிலையில், அந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவின.

இதனை மறுத்துள்ள சி.ஐ.எஸ்.எப்., டுவிட்டர் பதிவில், '' சி.ஐ.எஸ்.எப்., அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆதாரம் இல்லை. உண்மையாக கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது,''எனக் கூறப்பட்டுள்ளது. 
 

click me!