PTR-ஐ வெச்சு செஞ்ச நெட்டிசன்கள்... அசிங்கப்பட்ட திமுக ஐடி விங்..!

By Thiraviaraj RMFirst Published Jul 18, 2020, 6:06 PM IST
Highlights

திமுக ஐடி விங் மாநில செயலாளரும், எம்.எல்.ஏவுமான பி.டி.பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஐடிவிங்கை கவனிக்கும் ராஜ் சத்யன்,  சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்கு அறிவுரை கூறி எழுதிய கடிதத்தால் திமுக ஐடி விங் அசிங்கப்பட்டு தவிக்கிறது. 

திமுக ஐடி விங் மாநில செயலாளரும், எம்.எல்.ஏவுமான பி.டி.பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஐடிவிங்கை கவனிக்கும் ராஜ் சத்யன்,  சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்கு அறிவுரை கூறி எழுதிய கடிதத்தால் திமுக ஐடி விங் அசிங்கப்பட்டு தவிக்கிறது. 

தனது ஆன்மீகப்பற்று, குடும்பத்தினரின் கடவுள் நம்பிக்கை, பாரம்பரிய இறைபணி குறித்து எடுத்துக்கூறி அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘’அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் நடக்கும் கட்சியில் பொறுப்பு வகித்து வரும் தம்பிகள் ராஜ் சத்யன், சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு...  இருவருக்கும் அண்ணன் என்ற முறையில் நான் அறிவுரை கூற கடமைப்பட்டு இருக்கிறேன்

.

தம்பிகளுக்கு என் அறிவுரை. அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் நடக்கும் கட்சியில் பொறுப்பு வகித்து வரும் தம்பிகள் ராஜ் சத்யன்- சிங்கை ராமச்சந்திரன் இருவருக்கும் அண்ணன் என்ற முறையில் நான் அறிவுரை கூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்து மதத்தில் சுதந்திரத்தையும் வழிபாட்டு உரிமையையும் பெற்றுத் தரும் நோக்கோடுதான் திராவிட இயக்கம் நீதிக்கட்சி காலத்திலிருந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி இருக்கிறது.

இறைநம்பிக்கை என்பது இறையாண்மை என்பது பலரும் வெவ்வேறு வகைகளில் அறிந்துகொண்டு பின்பற்றும் உண்மை ஆன்மிகத்துக்கும் அரசாங்கத்திற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது என்பது எல்லா நாடுகளிலும் அரசியலமைப்பு சட்டத்தில் முக்கிய விதிமுறைகளாக இருக்கிறது. இதனால்தான் நான்கு தலைமுறைகளாக அரசியல் அடிப்படையில் திராவிட இயக்கத்தின் கொள்கைக்கு ஆதரவாக எங்கள் குடும்பம் இருக்கிறது.

அதே சமயம் தமிழகத்தில் வேறு எந்தக் குடும்பத்திற்கும் குறையாத அளவுக்கு தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இறைப் பணிகளை ஆற்றி இருக்கிறோம். என்னை வளர்த்த முன்னோர்கள் அறிவுறுத்தலின்படி மக்களுக்கு நல்லது செய்வதுதான் ஆன்மீகத்தின் முக்கிய அடையாளம் என்றைக்கும் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்ற வாழ்க்கை முறையை நான் பின்பற்றுகிறேன். எந்த ஒரு செயலில் நியாயத்தையும் விளைவுகளால் தான் கணக்கிட்டு அறியமுடியும் நாங்கள் செய்து வரும் நல்ல செயல்களின் விளைவாக தான் பல நூற்றாண்டுகளாக பல தலைமுறைகளாக பெரும் செல்வத்துடன் நல்ல பெயருடனும் வாழ்ந்து வருவதே இறைவனிடம் கிடைத்த வரம். 

அது இன்றைக்கும் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்புகிறேன் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருப்பணி செய்யும் போது என் தாத்தாவுக்கு வாழ்த்து சொன்ன காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னபடி என் தாத்தாவும் என் அப்பாவும் ஆன்மீக இலக்குகளை எனக்கு வகுத்துத் தந்துள்ளார்கள். அதே அடிப்படையில் ஆன்மீகத்தையும் இறைவன் பெயரை வைத்து அரசியல் பிச்சை எடுப்பவர்களை நான் மனிதர்களாகவே கருதுவதில்லை. சாக்கடையில் மிதக்கும் நோய்த்தொற்று ஏற்பட்ட அட்டைகளாக கருதுகிறேன். எந்த ஒரு மதத்தின் பெயரிலும் தீவிரவாதம் செய்பவர்கள் அனைவரும் ஒரே தரம் தான். தம்பி ராஜ் சத்யன் உன் தாத்தா காலத்திலிருந்து உங்கள் குடும்பம் எங்கள் மேல் வைத்திருந்த பாசத்தையும் மரியாதையையும் எண்ணி ஏன் இன்றைக்கும் உன் தந்தை மற்றும் உன் அத்தை போன்றவர்கள் பழகும் முறையை கருதித்தான் உனக்கு பதில் அளிக்கும் அளவுக்கு கவனத்தை கொடுக்கிறேன்.

அதேபோல் தம்பி சிங்கை ராமச்சந்திரன் சிறந்த கல்வி நிறுவனங்களில் நன்கு படித்தவர் என்பதால் தான் இந்த அளவுக்கு அறிவுரை சொல்கிறேன். உங்களுக்கு தெரிந்த உண்மை உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். என் தந்தை பெயர் பழனிவேல் என் இரு மகன்களின் பெயர்கள் பழனி மற்றும் வேல். இந்த பெயர்களுக்கு ஏற்ப எங்கள் ஆன்மீகப் பணிகள் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. உதாரணத்திற்கு ஆண்டுதோறும் பழனியில் எங்கள் மண்டகப்படியில் தான் இறைவன் முருகன் எழுந்தருளும் மரபு இன்றும் தொடர்கிறது. மேலும் பல பத்தாண்டுகளாக ஆண்டுதோறும் பத்து நாட்களுக்கு மேல் ராக்கால பூஜை எங்கள் குடும்பத்தின் சார்பாக தொடர்ந்து நடத்தியும் வருகிறோம்.

சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு இல்லாத வகையில் சுயமரியாதையுடன் வாழ தக்க ஒரு வாழ்க்கை அன்னை மீனாட்சியின் அருளால் எனக்கு இருக்கிறது. அண்ணா பெயரில் நடக்கும் கட்சியில் பொறுப்பில் உள்ள தம்பிராஜ் சத்யன் பாராளுமன்ற வேட்பாளராக இருக்கும்போது கூட செய்யாத தவறுகளை இன்று சாக்கடை அட்டைகள் அளவுக்கு இறங்கி செய்திட வேண்டாம் என அண்ணன் என்ற முறையில் பாசத்துடன் அறிவுறுத்துகிறேன். ஒருவேளை இங்கிருந்து சென்ற இந்து மத விரோதி மற்றும் தமிழின துரோகி என்று உங்களுக்கும் தவறான அறிவுரை சொல்லும் பட்சத்தில் திராவிட இயக்கத்தினால் முன்னேறியவர்கள் நீங்கள் காவி வண்ணத்தைப் பூசி கொண்டு இந்து மதம் மற்றும் தமிழினத்திற்கு துரோகம் செய்யும் செயல்களில் இறங்கி விட வேண்டாம் என பாசத்துடன் அறிவுறுத்துகிறேன். அரசியலுக்காக தன்மையையோ, கொள்கையையோ சுயமரியாதையோ பலி கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து இருந்தார். 

அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் நடக்கும் கட்சியில் பொறுப்பு வகித்து வரும் தம்பிகள் , இருவருக்கும் அண்ணன் என்ற முறையில் நான் அறிவுரை கூற கடமைப்பட்டு இருக்கிறேன். pic.twitter.com/3CamB0Ev3Q

— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai)

 

இந்தக் கடிதம் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும், திமுக ஐடி விங்கையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒரு கட்சியை சேர்ந்தவர் மாற்று அல்லது எதிர்கட்சியினருக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு யார் உரிமை கொடுத்தது. அறிவுரை கொடுக்க வேண்டிய அவசியமென்ன? ன் இவ்வளவு நல்லவர் ஏன் இந்து விரோத திமுகவில் இருக்க வேண்டும். திமுக இந்து விராதி. இதில் உங்கள் இந்து பாசம் ஏமாற்று இனி நடக்காது. இனி திமுக அழிவு உறுதி’’ என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் திமுக ஐடி விங்கின் நிலைமை வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகி விட்டது. 

click me!